Saturday, December 29, 2007

42.அந்தணர்வேதியர்கள்

ஞானம் எட்டி
**************
42.அந்தணர்வேதியர்கள் என்குலத்தை
.......அசட்டுப்பறையனென்று தள்ளினர்காண்
சந்தியுஞ் சடங்கறுத்து வள்ளுவனென்னைச்
........சாம்பவமூர்த்தியென்றேதான் தொழுதார்
விந்துவுநாதமுங்கூடி எங்கெங்குமேவும்
.......எண்பத்துனான்குயிர்க்குமேலதிகமாம்
வந்தவழிதனையறியார் பிரமகுல வங்கிட
........வானென்றுமவர் போற்றிசெய்வார்.

ஒன்றுமறியாத அசட்டுப் பறயைனாவான் இவனென்று அந்தணர்கள், வேதியர்கள் எல்லாம் என்குலத்தையிகழ்ந்து என்னையும் தள்ளிவிட்டார்கள். திருவருட்சத்தியென்றாலோ மேற்சொன்ன குற்றத்தை நீக்கி திருவள்ளுவனாகிய என்னை சாம்பவ மூர்த்தியென்றே வணங்கினர். ஆனாலும்விந்துவும், நாதமும் கூடியே எண்பத்துநான்கு நூறாயிரம் சீவன்கள் ஆனமையால் இதுவே அதிகமாம். இப்படிவந்த வரவையறிந்த என்னை விட்டுவிட்டு, அறியாத அவ்வேதியர்களை உலகத்திலுள்ளார் உயர் பிரம குல வமிசவானென்று துதிசெய்வார்கள். ஆகையால் இவருடைய அறியாமையை என்னவென்று சொல்லுவது.

வேண்டுகோள்

0 Comments: