ஞானம் எட்டி
**************
தன் வரலாறு
***************
41.சாதியிலுயர்ந்தவன்காண் நவரத்ன
...........சங்கப்பலகையின் மேலிருந்தவன்காண்
வேதியர் சாஸ்திரியர் துதிசெய்யும் விருது
..........பெற்றிடும் வீரசாம்புவன்காண்
பாதிமதி சடையணிந்தோன் சிரசில்வளர்
..........பங்கயக்கங்கை யமிர்தச் செங்கைநதியில்
சுருதியின் பொற்கமலம் மதிரவியின் சூட்டிடுஞ்
..........சாம்புவ னென்போன்காணும்.
நானே சாதியில் உயர்ந்தவனாவேன். ஒன்பது ரத்தினங்களால் இழைக்கப்பட்ட சங்கப்பலகையின் மேலிருந்தவன்; வேதியர்களும் சாஸ்திரிகளும் துதிசெய்யும் விருதுகளை அடைந்திருக்கின்ற வீரசாம்புவனும் (சுடலை காப்போன், வெட்டியான்) நானே; பிறைமதியைச் சடையில் சுமந்த சிவபெருமானுடைய தலையிலிருந்து இழிந்து வழியும் கங்காதேவியின் வேதமொழிபெற்ற திருவடிகளை இடைகலை பிங்கலைகளுக்குச் சூட்டுகின்ற வெட்டியானும் நானே.
வேண்டுகோள்
Saturday, December 29, 2007
41.சாதியிலுயர்ந்தவன்காண்
Posted by ஞானவெட்டியான் at 4:51 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஐயா, உங்கள் பெயர் இங்கே அடிபடுகிறது
http://karuppupaiyan.blogspot.com/2006/03/blog-post_29.html
சம்மட்டி
அன்பு சம்மட்டி,
பெயர்தானே அடிபடுகிறது. என்னை அடிக்கவில்லை. பெயர் அடிபடட்டும். அப்போது உண்மை வெளிப்படும்.
Post a Comment