Saturday, December 29, 2007

40.பூணநூல் தரித்துக்கொள்வோம்

ஞானம் எட்டி
**************
40.பூணநூல் தரித்துக்கொள்வோம் சிவசிவ
............பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்வோம்
வேண விருதுகளும் விசி(கி)தமாய் வெண்குடை
...........வெண்சாமரமும் பிடித்துக்கொள்வோம்
வானவர் முனிவர் தொழும் பொன்விசிறி
...........மரகத குண்டலத்தின் கவசங்களும்
ஞானப்பிர காசவொளி திவ்வியரச
..........நாதவிந் தர்ச்சனைகளில் நாம்துதிப்போம்.

நாங்கள் பூணூலைத் தரித்துக்கொள்வோம். ஐம்பொறிகளையும், ஐம்புலன்களையும் தொழுது வணக்கம் செய்வோம். வேண்டிய விருதுகளையும், வெண்கொற்றக்குடை, வெண்சாமரம் இவைகளைப்பிடித்துக் கொள்வோம். தேவர்களாலும், முனிவர்களாலும் தொழப்படுகின்ற பொன்னாற் செய்யப்பட்ட விசிறியையும், மரகதத்தால் செய்யப்பட்ட கவச குண்டலங்களையும் பெற்றுக் கொள்வோம். ஞானப்பிர காசவொளி வீசும் நாதவிந்துகளுக்கு அர்ச்சனைசெய்து துதிப்போம்.

வேண்டுகோள்

0 Comments: