Saturday, December 29, 2007

39.நால்வகை யோனிதனில்

ஞானம் எட்டி
**************
39.நால்வகை யோனிதனில் பிறந்துதித்த
...........நால்வேத ஞானமும் வந்துதித்ததுகாண்
கோலமிதை யறியாமல் உலகருமே
.........குருடர்கள் வேறுசெய் தினம்பிரிப்பார்
மாலப்பறை யனென்றே உலகர்கூடி
........வாய்பிதற்றி வழக்கு வாதாடுவர்காண்
பாலரறியா மலென்னைப் பழித்துமிகப்
........பகடித் தனராண் டேகேளீர்.

யோனிகள் வகை - ஆண்குறி, காரணன், நீர்பிறப்பு,பெண்குறி

இதையே சமக்கிருதத்தில் அண்டஜம், சுவேதஜம், உற்பீதஜம், சாராயுஜம் என்பர்.

ஆயினும் யோனி 14 - விலங்கு, பறவை, பசு, பாம்பு, தாவரம், மானிடம், பைசாசம், இராக்கதம், இயக்க, காந்தருவம், ஐந்திரம், செளமியம், பிரசாபத்தியம், பிரமம் முதலியன என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

நால்வகையோனி - நால்வகை உயிர்த் தோற்றம்

கருப்பையில் தோன்றுவது, முட்டையில் தோன்றுவது, வித்துவிலிருந்து தோன்றுவது, வியர்வையிலிருந்து தோன்றுவது ஆகிய நால்வகை யோனிகளிகளில் உதித்த பிறவிகளின் அறிவால் உதித்த நான்கு வேத ஞானமும் என்னிடம் வந்து வெளிப்பட்டது கண்டீரோ!

ஆகையால் இப்படியிருப்பதை, இனம் பிரித்தறியா குருடர்கள் போல் உலகத்தார்கள் உணராமல் என்னை வேறுபடுத்தி மாலப்பறையனென்று சொல்லிப் பிரித்துவிடுவார்கள். அவர்கள் ஒன்று கூடி வாயினாற் பலபேசி என்பிறப்பை இகழ்ந்து பேசி வாதாடுவார்கள். என் இயல்பையும் மனப்பக்குவத்தையும் அறியாது என்னைப் பழித்துப் பேசி கிண்டல்(பகடி) செய்கின்றனர் ஆண்டே கேள்!

வேண்டுகோள்

2 Comments:

Anonymous said...

//வியர்வையிலிருந்து தோன்றுவது //
என்னது வியர்வையிலிருந்து எப்படி சார் உயிர் தோன்றும்

Anonymous said...

அன்பு என்னார்,
இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.
பார்த்த பார்வையில் கருத் தரித்த கதைகூட உண்டு.