Saturday, December 29, 2007

38.கட்டையு மடுக்கிக்கொள்வோம்

ஞானம் எட்டி
**************
38.கட்டையு மடுக்கிக்கொள்வோம் பிணமதற்கு
.......காற்பண முழத்துண்டு வாங்கிக்கொள்வோம்
அட்டவிதப் பரீட்சைகளும் ஆண்டேகேளீர்
.....அங்க சுத்திகளுஞ்செய்ய அடவெடுப்போம்
சுட்டதொரு அத்திகளுமே சேதம்வராமல்
.....துரிதமாய் பொறுக்கியே கட்டிடுவோம்
நட்டனைநடை நடப்போம் ஆதியருள்
.....நாதனை யனுதினமும் போற்றிசெய்வோம்.


என்னுடைய ஆண்டே! கேளும். பிணத்தைச் சுடுதற்கான கட்டையை அடுக்குவோம். அப்பிணத்தை எரிக்க காற்பணமும், முழத்துண்டும் கூலியாக வாங்கிக்கிக்கொள்வோம். எல்லாவிதச் சாங்கியங்களையும், உடல் உறுப்பு சுத்தம் செய்யும் முறைகளையும் செய்வோம். கூடிய விரைவில் சுட்ட எலும்புகளையும், சாம்பலையும் பொறுக்கி மூட்டையாய்க் கட்டி வைப்போம். பறையடித்து அதன் தாளத்திற்கேற்ப நடை நடந்து கூத்திசைப்போம். ஆதி முதல்வனாம் சிவனை தினம்தினம் வணங்கிப் போற்றுவோம்.

வேண்டுகோள்

0 Comments: