Saturday, December 29, 2007

37.செத்ததோர் மாடெடுப்போம்

ஞானம் எட்டி
**************
37.செத்ததோர் மாடெடுப்போம் சிவசிவ
........... சுடுகா டனுதினங் காத்திருப்போம்
நித்தமுங் கடவுள்தனை ரவிமதியின்
.......... நேசமுடனே யுறுதி வாசஞ்செய்வோம்
சுத்தவீர சைவமுடன் வாசிவாவெனும்
......... தோத்திரஞ்செய்தே பொசித்துக் காத்திருப்போம்
கர்த்தனை யந்திசந்தி உச்சமதிலும்
........ கருத்தினிலே நினைப்போ மாண்டேகேளீர்.

உறுதி - அறிவு

என்னுடைய ஆண்டைமாரே! நான்சொல்லும் எங்கள் விதயங்களை நீங்கள் நன்றாய்க்கேளுங்கள் அவை என்னவென்றால், செத்துப்போன மாட்டையெடுப்போம், சுடுகாடு காப்போம், சூரியசந்திரர்களின் சந்திப்பால் தினம்தினம் அறிவுடன் வாழ்ந்து கடவுளை வணங்குவோம். அன்றிச் சுத்தவீரசைவமார்க்கத்தில் கலந்து வாசிவா! என்று வணக்கம்செய்து, உணவையுண்டு அக்கடவுளிடத்திலேயே பொருந்தியிருப்போம். காலை மாலை, உச்சி வேளைகளிலும் கடவுளுடைய திருவடிகளைச் கருத்தினில் (சிந்தையில்) வைத்துச் சிந்திப்போம்.

வேண்டுகோள்

0 Comments: