ஞானம் எட்டி
***************
36.ஒளிவெளி மதிதாண்டி சிவசிவ
........... ஒன்பது வாசலுங் கட்டறுத்து
தெளியவும் பொறிபுலனும் சிக்கறுத்துச்
......... சிந்தைய கற்றி மனதொருப்படுத்திப்
பொழியவு மமிர்தரசம் பொசிக்கவின்பம்
........ பூசிக்கப்பூசிக்க ஞானம் பூரணமதாய்
சுழிதனி லெழுந்ததொரு வாசியெனும்
....... சோதியைக் கண்டவனும் நான்காணும்.
வெளியில் உள்ள ஒளியையும், மதியையும் தாண்டி ஒன்பது வாசல்களையும் கடந்து தெளிவாகிய போத நிலை அடையவும், மாயையில் சிக்கியுள்ள ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் சிக்கறுத்து, மனத்தை ஒடுக்கி, அமிர்தம் உண்ண, ஞானம் பூரணமாய் சுழியில் எழுந்த ஒருவாசி என்கிற சோதியைக் கண்டவனும் நானேயாவேன் .
வேண்டுகோள்
Saturday, December 29, 2007
36.ஒளிவெளி மதிதாண்டி
Posted by ஞானவெட்டியான் at 4:43 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
வெளியில் உள்ள ஒளியையும், மதியையும் தாண்டி ஒன்பது
ஒளிஎன்றால் என்ன மதி என்றால் என்ன
சூரியன் சந்திரனா?
இன்னமும் நல்ல விளக்கம் கொடுத்தால் தான் எங்களுக்கு விளங்கும்
அன்பு என்னார்,
வெளி - சிதாகாயப் பெருவெளி.
ஒளி - கதிரவன்
மதி - சந்திரன்
இதைத் தாண்டுவதெப்படி? தனித்தனியாக? இயலாதே! ஆக முதலில் நம் பிண்டத்தில் இவைகளை அக்கினியுடன் ஒன்று சேர்த்து, அக்கினிகலையால்தான் தாண்ட இயலும்.
இங்கு வாசி என்பது அக்கினி கலையுடன் சேர்ந்த உயிர்மூச்சு.
//........... ஒன்பது வாசலுங் கட்டறுத்து
தெளியவும் பொறிபுலனும் சிக்கறுத்துச்
......... சிந்தைய கற்றி மனதொருப்படுத்திப்
பொழியவு மமிர்தரசம் பொசிக்கவின்பம்
........ பூசிக்கப்பூசிக்க ஞானம் பூரணமதாய்
சுழிதனி லெழுந்ததொரு வாசியெனும்
....... சோதியைக் கண்டவனும் நான்காணும்.//
சூரிய, சந்திரனை கடந்து (முதலில் புறவுலகை கடந்து), பின் தானாக நினைக்கின்ற உடலை கடப்பதற்கு மனதாகிய அகம் அல்லது ஆத்மாவை ஒருமுகப்படுத்தி தபசு செய்ய செய்ய, தன்னை (தன் சுய ஒளியை) அறிந்து கொள்வதுமில்லாமல், சிவன் எனும் பரம்பொருளான சோதியையும் அறிந்து கொள்பவன் நானாவேன் என்று எடுத்துக் கொள்ளலாமா ?
அன்பு கண்ணன்,
//சூரிய, சந்திரனை கடந்து (முதலில் புறவுலகை கடந்து), பின் தானாக நினைக்கின்ற உடலை கடப்பதற்கு மனதாகிய அகம் அல்லது ஆத்மாவை ஒருமுகப்படுத்தி தபசு செய்ய செய்ய, தன்னை (தன் சுய ஒளியை) அறிந்து கொள்வதுமில்லாமல், சிவன் எனும் பரம்பொருளான சோதியையும் அறிந்து கொள்பவன் நானாவேன் என்று எடுத்துக் கொள்ளலாமா ?//
சிதாகாயப் பெருவெளி உடலுக்கு வெளியில் இல்லை. அது உள்ளேயேதான் உள்ளது.
மனம் வேறு; ஆன்மா வேறு.
சூரிய சந்திரகலைகள் அக்கினி கலையில் ஒன்று சேர்க்க, குண்டலி விழித்தெழும். அக்குண்டலினிச் சத்தியால்(வாசி எனும் உயிர்க்கற்று) கபாலக் குகை தடையை உடைத்து சிதாகாயத்தில் வாழ்ந்து வருபவன் நானே எனக் கொள்ளல் நலம்.
வெளி - சிதாகாயப் பெருவெளி.
ஒளி - கதிரவன், வலது கண்
மதி - சந்திரன், இடது கண்
இதைத் தாண்டுவதெப்படி? தனித்தனியாக? இயலாதே! ஆக முதலில் நம் பிண்டத்தில் இவைகளை அக்கினியுடன் ஒன்று சேர்த்து, அக்கினிகலையால்தான் தாண்ட இயலும்.
இங்கு வாசி என்பது அக்கினி கலையுடன் சேர்ந்த உயிர்மூச்சு.
//சிதாகாயப் பெருவெளி உடலுக்கு வெளியில் இல்லை. அது உள்ளேயேதான் உள்ளது.
மனம் வேறு; ஆன்மா வேறு.//
எனக்கு தெரிந்து படித்த நூல்களின் மூலம் மனம், புத்தி, கர்மம் என மூன்று தொகுப்புகளை உள்ளடக்கியது ஆன்மா. மனம் வேறு ஆன்மா வேறு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் சொல்லவதைப் பார்த்தால் ஆன்மா என்பது வெற்றிடம் போல் தெரிகிறது.
மனம் - எப்பொழுதும் எண்ண அலைகளை எழுப்புவது.
புத்தி - அந்த எண்ண அலைகளை ஆராய்ந்து செயல்படுதலை தீர்மாணிப்பது
கர்மா - மனம், புத்தியின் மூலம் செய்யப்படும் கர்மவினை - செயல்பாடுகளின் பலாபலன்களின் சேமிப்பது.
இவை மூன்றும் ஆன்மா எனப்படும் ஒளித்திவலையில் அடங்கியிருக்கிறது. இது உடலோடு ஊடும் போது பிறவி என்கிறோம், - விழிப்பு நிலை ஒடுங்கி இருக்கும் போது பிறப்பில்லை என்கிறோம் அதாவது காலமும், இடமும் அறியப்படாத விதை நிலை.
அன்பு கண்ணன்,
தங்களின் வினாவுக்கு நெடியதொரு விளக்கம் தரவேண்டியிருப்பதால் தனி இடுகையாக இட்டுள்ளேன்.
Post a Comment