Saturday, December 29, 2007

35.பூணநூல் பிறந்ததெங்கே

ஞானம் எட்டி
***************
35.பூணநூல் பிறந்ததெங்கே சிவசிவ
பின்குடுமியான துவுமான தெங்கே
வானோர்கள் துதிப்பதெங்கே மணிமந்திர
வாக்கிய செபதபங்கள் வாழ்க்கையெங்கே
கோனருள் புரிவதெங்கே யாகசாலைக்
குருக்களாச் சாரியென்றுங் கூறுவதெங்கே
வீணிலே யோதுகின்ற வேதியர்களே
வேதம் பிறந்திடமுஞ் சொல்வீர்காண்.

பூண நூல்(பூணூல்) பிறந்ததும், பின்குடுமி உண்டானதும் எங்கே? வானோர்கள் துதிப்பதும், மணி, மந்திரம், வாக்கியம், செபம், தவம், இவைகளையெல்லாம் செய்து வாழும் வாழ்க்கை எங்கே? இறைவனருள் செய்வது எங்கே? யாகசாலைக் குருக்கள், ஆசாரியர்கள் என்று சொல்லிகொண்டு திரிவது எங்கே? வீணாக முனுத்தங்கள்(மந்திரங்கள்) ஓதுகின்ற வேதியர்களே! வேதம் பிறந்த இடத்தை உங்களால் சொல்ல முடியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்.

பூணநூல் - பூணூல் - முப்புரிநூல் - சூரிய, சந்திர, அக்கினி கலைகள்தான் முப்புரி. அவைகளை ஒன்று சேர்க்க அறிந்தவுடன் முப்புரிநூல் அணியலாம்.

பின்குடுமி - அது இருக்குமிடத்தில்தான் மாலவனாம் முகுளம் உள்ளது. அதைக் கதிரவனின் வெப்பத்திலிருந்து தடுக்கவே அக்காலத்தே பின் குடுமி வைத்திருந்தனர். அக்காரணத்தாலேயே பின் வந்தவர்கள் தலைப்பாகை அணிய ஆரம்பித்தனர்.

வேண்டுகோள்

2 Comments:

Anonymous said...

பூணநூல் - பூணூல் > பூணும் + நூல் செந்தமிழ் செல்லே.

மந்திரம் < மன் + திரம் ; இதில் மன் என்பது தமிழ்ச்சொல், திரம் என்ற பின்னொட்டு சேர்த்து மந்த்ரம் என்று வடவர் மொழியால் திரிக்கப்பட்டது

ஆதார நூல் : பண்டிதர் வேர்ச்சொல் அகாராதி - மணிமேகலைப் பிரசுரம்

ஆதாரமும் தமிழ் சொல்லே ( ஆதரவு , ஆதரம்)

Anonymous said...

அன்பு கண்ணன்,

ஆமாம்.ஆமாம்.
வேர்ச்சொல் அகராதி படிக்கும் அளவுக்கு நம் நண்பர்கள் முன்னேறிவிட்டனர் என்பது காண மிக மகிழ்ச்சியாக உள்ளது.