ஞானம் எட்டி
***************
34.ஆதியந்த முங்கடந்து ஆதாரமூலம்
அதுகடந்த பரவெளி தாண்டி
நீதியின் மறைவிளங்கும் முப்பாழ்கடந்து
நின்றபரி பூரணத்தின் நிலைகடந்து
ஓதுமறை வேதமுந்தாண்டி பிரகாசவொளி
ஓங்கார ரீங்காசனத்தி லுறுதியதாய்ச்
சோதியின் நிலையில்நின்று சுழிமுனையில்
துதித்துத்தொழுத சாம்புவன் காணும்.
ஆதியந்தங்களையும், ஆதாரமூலம், பரவெளி, நீதியுள்ளவேதங்களில் விளங்குகின்ற முப்பாழையுங் கடந்து நின்றபரிபூரணத்தின் நிலையையும் கடந்து வேதத்தையும் தாண்டி பிரணவமென்னும் சிங்கசனத்தில் உறுதியாக சோதிநிலையில் நின்று சுழிமுனையில் துதித்துத் தொழுத சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) நானேயாவேன்.
வேண்டுகோள்
Saturday, December 29, 2007
34.ஆதியந்த முங்கடந்து
Posted by ஞானவெட்டியான் at 4:41 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment