Saturday, December 29, 2007

33.அறுந்ததுநூல் பிணைக்கும்

ஞானம் எட்டி
***************
33.அறுந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ
அச்செனும் பாவமது கண்டமட்டும்
சிறந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ
சித்திரச் சாம்புவ னான்காணும்
பரந்தபஞ் சதுநூலாம் இழைபிசகா
பறைநூ லதுபஞ்ச வர்ணமதாய்
நிரந்தர விசிதமெனும் சிவசிவ
நிட்டைதனில் மிகுந்த நிர்மலன் காண்.

அச்சு - உடல்
பாவம் - இயக்கம்
மிகுதல் - பூரித்தல்

பரந்து விரிக்கப்பட்ட பஞ்சு இழைபிசகா நூலாகும். உள்ளே உடலியக்கம் கண்டு அங்கு அறுந்த நூலாம் வாசியைப் பிணைப்பேன். இஞ்ஞனம் உடலினுள் உயிர்மூச்சைப் பிணைக்கின்ற சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) நானேயாவேன். அழிவற்ற விபூதி நிட்டையில் பூரித்து நிலத்து நிற்பவன் நான் தான் காணும்.

0 Comments: