Saturday, December 29, 2007

32.சிக்கிய நூல்பிணைப்பார்

ஞானம் எட்டி
***************
32.சிக்கிய நூல்பிணைப்பார் சிவசிவ
சேணிய சாதியி லுள்ளபடி
புக்கியநூ லிழைக்கும் பூதங்களில்
புரிந்தநூ லிழைகளைப் பூட்டிவைப்பார்
தக்கிய பறையெனவும் சிவசிவ
சாதிகளில் முதல் சாதியெனு
முக்கிய நூல்பிணைக்கும் மெய்ஞ்ஞான
மூர்த்தி சாம்பு வனான்காணும்.

புக்கிய = உள்ளிருக்கும்
தக்கிய = ஆட்சிக்குட்பட்ட
சாம்புவன் = சுடலை காப்போன்(வெட்டியான்)

நீங்கள் என் ஆட்சிக்கு உட்பட்ட அடிமையென நினைக்கும் பறையன்கள், உடலின் உள்ளே இருக்கும் ஐம்பூதங்களின் தன்மையறிந்து, அவைகளை இணைக்கும் நூல் சிக்கைப் பிரித்தெடுத்து சேணியன் செய்வதைப் போல் பிணைத்துக் கிடைத்த நூல் இழைகளைச் சேமித்து வைப்பார்கள். ஆனால் நானோ, முக்கிய நூலாகிய குண்டலினியைப் பிணைக்கும் வகை தெரிந்த மெய்ஞானி. ஆயினும் என்னை சுடலை காப்போன் (வெட்டியான்) என்றழைக்கின்றீர்.

0 Comments: