ஞானம் எட்டி
***************
31.சபைதனி லுள்ளவர்காள் ஆண்டையேகேள்
சாதியி லீனனெனச் சாற்றுகிறீர்
உறுபய மில்லாமலும் அகஞ்சுத்தி
யுடலறியார் செபங்க ளோதுகிறீர்
வபையமதா கியநூல்கள் வீண்பிலுக்கர்
வாசியறி யாமலுமே மயங்குகிறீர்
ஒளவையார் குலத்தில்வந்த வள்ளுவனெனும்
ஆதி பீடமு நான்காணும்.
சபையிலுள்ள ஆண்டைமாரே கேளுங்கள், என்னை சாதியில் (ஈனன், நீசன்) தாழ்ந்தவனெனச் சொல்லுகிறீர்கள். உறு(மிகுதியான) பயமில்லாமலும், தன் உடலினுள் சுற்றி வந்து உட்லுக்குல் இருக்கும் இரகசியங்களை அறியாமல் முனுத்தங்களை(மந்திரங்களை) முனுமுனுக்கிறீர்கள். நூல்களையும், வீண்பேச்சுக்கள் பேசும் புல்லர்களின் வார்த்தைகளையும் கண்டு மயங்குகிறீர். தன் வாசி எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பதையறியாமலும் மயங்குகின்றீர். ஒளவையார்குலத்தில் உதித்தவனும், மேற்கூரியவற்றை அரிந்தவனுமாகிய திருவள்ளுவனென்னும் ஆதிபீடமும் நானேகாணும்.
Saturday, December 29, 2007
31.சபைதனி லுள்ளவர்காள்
Posted by ஞானவெட்டியான் at 4:38 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//ஒளவையார்குலத்தில//
என்ன குலம்
அன்பு என்னார்,
கட்டிவிட்ட கதையோ கோடி கோடி.
ஆயினும், ஒளவையும் திருவள்ளுவரும் பெரும ஞான குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே எம் கருத்து.
Post a Comment