Sunday, December 30, 2007

திருவாசகம் - 4.வாகம மாகிநின் றண்ணிப்பான்

திருவாசகம்
*************

4.வாகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க.


(ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க)

அண்ணித்தல் = சார்தல். பொருந்துதல், அணுகுதல்.

இல்லத்தைவிட்டுப் பிரிந்திருப்போருக்கு எப்படி அங்கிருந்து வரும் அஞ்சலோ, தகவலோ இனிமை பயக்குமோ, அங்ஙனமே, இறைவனை உணராதோருக்கு
அவனைப்பற்றி விளக்கும் ஆகமம், சாற்றிறங்கள் ஆகியவை படிக்கப் படிக்க இனிமை பயக்கும்.

அவர்களுக்கு, அவ்வாகமங்களும், சாற்றிறங்களுமே இறைவன்.

ஆகையால்தான், ஆகமாகி நம்முள் பொருந்தி இருக்கும் இறைவனின் தாள் போற்றி என்றார்.

1 Comment:

Anonymous said...

வணக்கம் ஐயா. இன்று தான் உங்கள் திருவாசகம் வலைப்பதிவைப் பார்த்தேன். மிக்க நன்றி. தொடர்ந்து படிக்கிறேன். இளையராஜா இசையமைத்துள்ள திருவாசகப் பாடல்களுக்கு விளக்கம் அளிக்க நானும் முயன்று அதனை இந்த வலைப்பதிவில் இட்டுள்ளேன். முடிந்தால் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.