விவேக சிந்தாமணி
**********************
44.அத்தியின் மலரும் வெள்ளை யாக்கைகொள் காக்கைதானும்
பித்தரின் மனமுநீரிற் பிறந்தமீன் பாதத்தாலும்
அத்தன்மால் பிர்மதேவ னாலாள விடம்பட்டாலுஞ்
சித்திரவிழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லைகண்டீர்.
அத்திப்பூவையும், வெண்ணிறக் காகத்தையும், பித்தனின் மனத்தையும், மீனின் பாதத்தையும், மும்மூர்த்திகளால் அளவிடப்பட்டு ஒரு வேளை கண்டறியப்பட்டாலும், சித்திரத்தை ஒத்த கண்களையுடய பெண்களின் நெஞ்சக் கருத்தைக் கண்டு தெளிந்தவர் இல்லை.
Monday, December 31, 2007
44.அத்தியின் மலரும் வெள்ளை
Posted by ஞானவெட்டியான் at 7:59 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அத்திபூ காயாகத்தானே இருக்கும்?
வெள்ளைக் காக்கையுண்டு
கண்டிப்பாக முடியாது
அன்பு என்னார்,
அதைத்தான் அவரும் சொல்கிறார். அவைகள் இருக்கமுடியாது; அப்படி இருந்தாலும் அவைகளின் மனநிலை அறியவியலும். ஆனால் மங்கையரின் மனம் சலித்துக்கொண்டே(சலனத்தால்) இருப்பதால் அதன் உள்வயணம் அறிவது கடினம் என்று.
Post a Comment