Wednesday, December 26, 2007

தாகி பிரபம் - 2

தாகி பிரபம் - 2
***************
ஞானாசிரியர் கருத்து:

இந்நூற் "றாகி பிரபம்" எனும் பெயருடைத்து. இதன் கருத்து,
தாகமுடையோருக்கான நீர்ப் பந்தர் என்பதாம்.

எவருக்கு ஞானத்தில் அளவற்ற தாகம்(பிரியம்) உள்ளதோ, அவருக்கிந்நூல் ஒரு
நீர்ப் பந்தர் எவ்வாறு தாகத்தை நீக்குமோ, அவ்வாறே ஞான வேட்கையை
இந்நூல் நீக்கிவிடும் என்பதாம் என்க.

இந்நூல் இறைஞான உதிப்பேயாம். எண்ணத்திற் கிளர்ந்தவை ஏகபேட்டியாகி
உதித்ததே இ·தெனின் மிகையாகாது. கருத்தா வினா வகுக்கச் சிருட்டி விடை
விடுத்ததே இ·தாம்.

குரோதம் விடுத்துக் குறை தடுத்து நிறையுளமெய்திக் கற்றிடின் இறைத்
திருவருளிசையுமென்பதில் ஐயமின்று.

இவ்வழியில் செல்ல விரும்புவோருக்கே இ·து அமைக்கப்பட்டுள்ளது. ஞான
சூனியங்களுக்கன்று.

வாழ்க மெய்ப்பொருள்!
வாழ்க மெய்ஞானம்!!
வாழ்க ஞானிகள்!!!

- அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல் ஹசனிய்யுல் ஹாஷிமிய்

0 Comments: