ஞானம் எட்டி
***************
29.நடுவணை தனிலேறி சிவசிவ
........ நாடிய குண்டலி வட்டத்துள்ளே
அடிநடு முடியறிந்து சுடரதில்
........ அனுதினம் வாசிகொண் டமிர்தமுண்டு
படியறிந் திசைநாதம் சிவசிவ
....... பத்துமொரு மித்துவரு பழக்கமதால்
வடிவுள்ள செகசோதி கமலமலர்
...... வந்துபணிந் தவனான் காணும்.
நடுவணை - நடுத்தண்டாம் முதுகு எலும்பு, பரவெளி, இடைவெளி.
படி - விதம்
சிவசிவ எனும் மந்திரத்தை நாடி ஓதி வட்டமாம் மண்டைக்குள்ளே, தினம்தோறும் குண்டலியின் அடி நடு முடி கண்டு, வாசி எனும் உயிர்(மூச்சு)க் காற்று கொண்டு அதில் நடுவே மேலேறி அமிழ்து உண்டு, நாதங்கள் பத்தும் ஒருமித்து வரும் பழக்கம் வரும் விதம் அறிந்ததால், அழகுள்ள பிரபஞ்ச சோதியாம் இறையடி (கமலமலர்ப் பாதம் - இரு விழிகள்)வந்து வணங்குபவன் நானாவேன்.
Friday, December 28, 2007
29.நடுவணை தனிலேறி
Posted by ஞானவெட்டியான் at 1:17 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment