Friday, December 28, 2007

30.வீம்புகள் பேசுகிறீர்

ஞானம் எட்டி
***************
30.வீம்புகள் பேசுகிறீர் சிவசிவ
..........வேடிக்கையா யின்பம் விளம்புகிறீர்
வேம்புகரும் பதுவாமோ மகத்துகளின்
..... விற்பனத்தைக் கண்டறியா விழலென்கிறீர்
சாம்பசிவ மூர்த்தியர்க்கே பட்டமது
..... தாபித்த சாம்புவனான் காணும்
தீம்புக ளறவீசித் தெளிந்தவர்கள்
..... சீர்பாதங் கண்டவர்போல் தெரிசிக்கிறீர்.

வீம்புகளையும், வேடிக்கையாக இன்பங்களைப்பற்றி பேசுகிறீர், வேம்புகரும்பாகுமோ? மகத்துக்களின்(மேன்மையானவைகளின்) விற்பன(விந்தைகளையும், நூதன)த்தைக்கண்டறியா விழல்(வீணன்) என்றுசொல்லுகிறீர்; சாம்பவமூர்த்திக்கு பட்டங்கொடுத்த சாம்பவன்நானேயாவேன்;அப்படியிருக்க தீம்பு(தீது, குற்றம்)கள் இல்லாது எல்லாம் தெளிந்தவர்களைப்போலவும், சீர்பெற்ற பாதங்களைக் கண்டவர்போலவும் என்னை இகழ்ந்து பார்க்கிறீர்கள் (தெரிசிக்கிறீர்)

2 Comments:

Anonymous said...

//வேம்புகரும் பதுவாமோ//
ஆகாது

Anonymous said...

அன்பு என்னார்,
மிக்க நன்றி.