Friday, December 28, 2007

27. கருதிரண்டு காயமதா

ஞானம் எட்டி
***************
27. கருதிரண்டு காயமதா யான வாறுங்
............ கருவியதி லேவளர்ந்து வெழுந்த வாறும்
உருத்திரண்டு கால்கைகள் வகுத்த வாறு
......... முடம்புக்குள் சதைநிணங்கள் தரித்த வாறும்
திரு விருந்த மண்டபங்கள் சமைந்த வாறும்
...... சிறுபிள்ளை யாய்ப்புவியில் பிறந்த வாறும்
அரூ பியெனு நாதாக்கள் பாதம் போற்றி
..... யாதியிலே சாதிகுல முரைப்பே ணாண்டே.

கருவானது திரண்டு உடலான விதமும், கருவிகரணங்களாம் இந்திரியங்களும் மனமும் அதிலே வளர்ந்து எழுந்த விதமும், கால்கைகள் உண்டான விதமும், உடலுக்குள் தசை நிணங்கள் உண்டான விதமும், திருவிருந்த மண்டபங்களாம் ஆதாரத் தானங்கள் உருவாகிய விதமும், சிறுபிள்ளையாகப் புவியில் பிறந்த விதமும் உருவமற்ற நாதாக்களாகிய ஞானியர்கள் பாதம் போற்றி வணங்கி, முதலிலே சாதிகுலத்தைப் பற்றிச் சொல்லுகிறேன் ஆண்டே.

பாயிரம் முற்றிற்று
**********************
வேண்டுகோள்

0 Comments: