Friday, December 28, 2007

26. எங்கள்குலஞ் சுக்கிலத்தா

ஞானம் எட்டி
***************
26. எங்கள்குலஞ் சுக்கிலத்தா லெடுத்த வாறு
.......... மெண்ணரிய சுறோணிதத்தால் வளர்ந்த வாறு
மங்காத வஞ்செழுத்தால் வந்த வாறும்
......... வகையுடனே வங்குலமோ தொண்ணூற் றாறு
சிங்கார மானமனம் புத்தி சித்தம்
........ செங்கனலாற் கொண்டெழுந்த வாங்கா ரந்தான்
கங்கையணி சங்கரனா ரம்பி கைப்பெண்
........ கருத்தாலே யெடுத்ததிந்தக் காய மாண்டே.

எங்கள் குலமும், சுக்கிலத்தாலெடுத்தது, எண்ணுதற்கரிய சுரோணிதத்தால் வளர்ந்தது, மங்காத ஒளிவீசும் பஞ்சாக்கரத்தால் வந்தது.
எங்கள் உடலோ, எங்கள் கையளவில் (சாண்) தொண்ணூற்றாறு.
எங்களுக்கும், மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் முதலிய அந்தக்கரணங்களும் உண்டு.
சடைக்கற்றையில் கங்கை தாங்கிய சங்கரனும், அம்பிகையும் கொண்ட கருத்து ஒப்புதலாலேயே இவைகள் யாவையும் கொண்டு இச் சரீரம் எடுத்ததாகும்.

ஆக, நாங்கள் எவ்வகையில் தாழ்ந்தவர்?

ஈங்கு, பஞ்சாக்கரத்தின் மகிமையையும், தத்துவங்கள் தொண்ணூற்றாறையும் விளக்கியுள்ளார்.

0 Comments: