Friday, December 28, 2007

25. பிரமகுல வேதியராய்

ஞானம் எட்டி
***************
25. பிரமகுல வேதியராய்ப் பிறந்தார் கோடி
............ பெருமையுள்ள சத்திரியராய்ப் பிறந்தார் கோடி
திறமையுள்ள வைசியராய்ப் பிறந்தார் கோடி
........... தெளிவான சூத்திரராய்ப் பிறந்தார் கோடி
உறவதித நால்வகையாய்ப் பிறந்தார் கோடி
.......... யுள்ளுணர்ந்து பாராமல் தள்ளினார்கள்
அரனருளாற் சபைநிறைந்த வாண்ட மாரே
......... யாதியிலே சாதிகுல முரைசெய் வேனே.

பிரமகுலமாம் வேதியராயும், பெருமையுள்ள சத்திரியராயும், திறமையுள்ள வைசியராகவும், தெளிவான சூத்திரர்களாகவும் பிறந்தவர்கள் கோடி.

உறவு (உற்ற சமயம்) நால்வகையாய்ப் பிறந்தார் கோடி.

உள்ளுணர்ந்து பாராமல் தள்ளி வைத்தனர். சபையில் நிறைந்துள்ள ஆண்டைமாரே! அரன் அருளால் முதலில் சாதிகுலத்தைப் பற்றி பொழிப்புரையாம் அறிவுரை தருவேனே.

வேண்டுகோள்

0 Comments: