Friday, December 28, 2007

24. அந்தமுள்ள குருவினடிக்

ஞானம் எட்டி
****************
24. அந்தமுள்ள குருவினடிக் கமலம் போற்றி
........... யன்னைதந்தை யிருவருந்தா னனுபோ கிக்கத்
தந்திரமா யிரவுதனி லணையும் போது
......... தாதுவிந்து நாதமது வெழுந்த போதில்
எந்தவுயிர் வேதமறை யறிந்த தாண்டே
....... யிடும்பரெல்லா நீசரென்று தள்ளினார்கள்
வந்தவழி போனவழி யிரண்டுஞ் சொல்வேன்
...... வகையறியா மாந்தர்களே யறிந்து கொள்வீர்.

வந்தவழி, போனவழி ஆகிய இரண்டையும், வகை(கூறுபாடு, வழிவகை, சாதியினம், வலிமை) அறியாத மாந்தர்களே, அழகுள்ள குருவின் திருவடித்தாமரைகளைப் போற்றி வணங்கிக் கூறுவேன்; அறிந்துகொள்ளுங்கள்.

அன்னை தந்தை இருவரும் இன்பநுகர்ச்சிக்காகத் (அனுபோகம்) தந்திரமாக இரவில் அணைந்தபோது உணர்வுப் பெருக்கால் விந்து எழுந்தபோதில் எந்த உயிர் வேதங்களை அறிந்தது ஆண்டே!; துயர்செய்யும் செருக்கர் (இடும்பர்)களெல்லாம் நீசன் எனத் தள்ளினார்.
வந்தவழி போனவழி யறிந்த நானோ நீசன்? அறியாத நீவிரல்லவோ நீசன்.

0 Comments: