Friday, December 28, 2007

23. திரைகடந்து திரைக்கு

ஞானம் எட்டி
****************
23. திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்
....... சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி
மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி
....... மதனகலி யாணதிரு வல்லி மாது
வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு
........ மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி
கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த
...... கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே.

ஏழு திரைச் சீலைகளைக் கடந்து, அதற்குமேலுள்ள பெரிய பாழ்(ஆகாயம், சூனியம், வெற்றிடம்) தாண்டி, சாகாக்காலும் வேகாத் தலையுந்தாண்டி, மறை புகுந்து ஓதுகின்ற வேதம் தாண்டி, கால்படா மலை (வரை) எழுந்த பதினெட்டம் கோட்டின் மேல் உள்ள மதன கலியாண திருவல்லி மாதா மாதுளம்பூப் போன்ற மனோன்மணியைப் போற்றி வணங்கி, எல்லைமீறிப்(கரைகடந்து) பறையனென்று தள்ளிவைத்த கருத்தை இனி நான் சொல்லுகிறேன் கேள் ஆண்டே(எசமானே).

பி.கு: சாகாக்கால், வேகாத்தலை, கால்படா மலை ஆகியவை மறைபொருட்கள்.

0 Comments: