Monday, December 31, 2007

17.தன்னுடன் பிறவா தம்பி தனை

விவேக சிந்தாமணி
**********************

17.தன்னுடன் பிறவா தம்பி தனைபெறாத் தாயார் தந்தை
அன்னிய ரிடத்துச் செல்வ மரும்பொருள் வேசிய ராசை
மன்னிய வேட்டின் கல்வி மறுமனை யாட்டி வாழ்க்கை
இன்னவாங் கருமமாறு மிடுக்கத்துக் குதவா தன்றே.

உடன்பிறவாதவர்கள், தன்னைப் பெறாத தாய் தந்தையர்கள், அன்னியரிடம் இருக்குஞ் செல்வம், பொருள் இச்சை கொண்ட விலைமாதர் ஆசை, ஏட்டில் எழுதியுள்ள கல்வி, பிறன் மனையாளொடு கூடிய வாழ்க்கை, இந்த ஆறுவகைகளும் தக்க சமயத்துக்குதவாது.

0 Comments: