விவேக சிந்தாமணி
**********************
18.ஒருநான்கு மீரையு மொன்றே கேளா
யுண்மையா யையரையு மரையுங் கேட்டேன்
இருநான்கு மூன்றுடனே யொன்றுஞ் சொல்லா
யிம்மொழியைக் கேட்டபடி யீந்தா யாயின்
பெருநான்கும் மறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னையோர் மொழிபுகல வேண்டா மின்றே
சரிநான்கும் பத்துமொரு பதினைந்தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியேமானே.
ஒருநான்கு மீரையு மொன்றே= 6. 6ம் இராசி கன்னி.
யையரையு மரையுங் = 3. 3ம்நாள் செவ்வாய்
இருநான்கு மூன்றுடனே யொன்றுஞ்= 12. 12ம் நட்சத்திரம் உத்திரம்.
பெருநான்கும் மறுநான்கும்= 21. 21ம் வருடம் ஜெய.
சரிநான்கும் பத்துமொரு பதினைந்தாலே= 29. 29ம் வருடம் மன்மத வருடம்.
கன்னியே! உன் செவ்வாயைக் கேட்டேன். ஓர் உத்திரம்(பதில்) சொல். கேட்டபடி கொடுப்பாயாகில் ஜெயம் பெறுவாய். வேறு மறுமொழி சொல்லக் கூடாது. மன்மத வேதனை சகிக்க இயலாது மானே.
Monday, December 31, 2007
18.ஒருநான்கு மீரையு மொன்றே
Posted by ஞானவெட்டியான் at 6:47 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment