Monday, December 31, 2007

16.கெற்பபந்தான் மங்கையருக் கழகு

விவேக சிந்தாமணி
**********************

16.கெற்பபந்தான் மங்கையருக் கழகு குன்றுங்
கேள்வியில்லா வரசனா னுலகம் பாழாந்
துற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ்
சொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தா லற்பர் கேளாற்
நன்மைசெய்யத் தீமையுட நைந்து செய்வார்
அற்பரோ டிணங்கிடிற் பெருமை தாழு
மரியதவங் கோபத்தா லழிந்துபோமே.

மங்கையருக்குக் கர்ப்பத்தினால் அழகு சிறிது குறையும். நியாயமுறை வினவாத வேந்தனால் அவன் ஆளும் அரசு பாழாகும். கெடுபுத்தியுடைய மந்திரியால் கேடு உண்டாகும்.

சொன்ன பேச்சு கேட்காத பிளைகளால் குலத்துக்கு சிறுமை உண்டாகும்.அற்பருக்கு நற்புத்தி கற்பித்தால் காது கொடுத்துக் கேட்கமாட்டார். அற்பருக்கு நன்மை செய்ய, நமக்குத் திருப்பி ஐந்து மடங்கு கேடு செய்வார். அற்பறொடு சகவாசம் வைக்க நம் பெருமை குறையும். அரிய தவப் பயன் கோபத்தால் அழிந்து போகும்.

0 Comments: