Monday, December 31, 2007

15.வெம்புவாள் விழுவாள் பொய்யே

விவேக சிந்தாமணி
**********************

15.வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல்விழுந் தழுவாள் பொய்யே
தம்பலந் தின்பாள் பொய்யே சாகிறே னென்பாள் பொய்யே
அம்பிலுங் கொடிய கண்ணா ளாயிரஞ் சிந்தை யாளை
நம்பின பேர்க ளெல்லாம் நாயினுங் கடையா வாரே.

ஆடவர்களை மயக்கவேண்டி அவர்தம் துன்பங்கண்டு மனம் வெதும்புவாள், மயங்கி விழுவாள், அந்த ஆடவரின் எச்சில் தாம்பூலத்தை தான் வாங்கித் தின்பாள், நானும் உங்களோடு சாகிறேன் என்பாள்; ஆயிரம் சிந்தை உடைய, அம்பினும் கொடிய கண்ணுடைய விலைமாதரை நம்பின பேர்கள் எல்லாம் மலமுண்ணும் நாயினும் கடையவரே.

0 Comments: