Monday, December 31, 2007

14.நாய்வாலை யளவெடுத்து பெருக்கி

விவேக சிந்தாமணி
**********************

14.நாய்வாலை யளவெடுத்து பெருக்கித் தீட்டி
நற்றமிழை யெழுத வெழுத் தாணியாமோ
பேய்வாழுஞ் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளி
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கென்
சாற்றிடினு முலுத்தகுணந் தவிர மாட்டான்
ஈவாரை ஈயவொட்டா னிவனு மீயா
னெழுபிறப்பி னுங்கடையா யிவன்பிறப்பே.

நாய்வாலை எழுத்தாணி இலக்கணப்படி நீட்டித் தீட்டினால் நல்ல தமிழ் எழுத்துக்களை எழுதுங் கருவியாகுமோ? பேய்கள் வாழுஞ் சுடுகாட்டைக் கூட்டித்தள்ளி பெரிய விளக்கேற்றி வைத்தால் குடியிருக்கும் வீடாகுமோ? தாயின் சொல் கேட்காத முரடனுக்கு என்ன சொன்னாலும் கஞ்சத் தனத்தை விடமாட்டான். தானும் கொடுக்காது மற்றவரையும் கொடுக்கவிடாது இருக்கும் இவன் சென்மம் எழுவகைப் பிறப்பினும் ஈனத்துவம் படைத்ததே.

0 Comments: