Monday, December 31, 2007

13.சங்குவெண் டாமரைக்குத் தந்தை

விவேக சிந்தாமணி
**********************

13.சங்குவெண் டாமரைக்குத் தந்தைதா யிரவிதண்ணீர்
அங்கதைக் கொய்துவிட்டா லழுகச்செய் தந்நீர்கொல்லுந்
துங்கவெண் கரையிற்போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்
தங்களி நிலைமைக்ந்ட்டா லிப்படி தயங்குவரே.

சங்கு போன்ற வெள்ளைத்தாமரைக்குச் சூரியனும் தண்ணீரும்தான் தந்தையும் தாயும். அந்த தாமரையைக் கொய்து விட்டால் தண்ணீரே அதை அழுகும்படி செய்துவிடும்.

கரையில் போட்டாலோ சூரியன் தன் வெப்பத்தால் காய்ந்துபோகச் செய்வான். தங்களின் நிலைவிட்டுப் பெயர்ந்தவர்கள் இங்ஙனம் வருந்துவரே.

0 Comments: