விவேக சிந்தாமணி
**********************
12.ஆலகால விஷத்தையும் நம்பலா
மாற்றையும் பெருங் காறையு நம்பலாம்
கோல மாமத யானயை நம்பலாங்
கொல்லும் வேங்கைப் புலியையு நம்பலாம்
காலனார்விடு தூதரை நம்பலாங்
கள்ளர் வேடர் மறவறை நம்பலாஞ்
சேலைகட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.
ஆலகால விடம், காட்டாறு, பெரும் சூரைக் காற்று, யானை, வேங்கைப் புலி, இயம தூதர்கள், கள்ளர், வேடர், மறவர் ஆகியோரையெல்லாம் நம்பலாம். ஆனால், ஆடவரை மயக்கிப் பொருள் பிடுங்கவென்றே அலங்காரமாகப் பளபளக்கும் சேலைகட்டிய மாதரை நம்பி நட்புக் கொள்ள, அவர்தம் கைப்பொருளை இழந்து, தெருக்களில் நின்று பிச்சைகேட்டு, அது கிடையாமையால் உளம் வருந்திப் படாத பாடு படுவராம்.
Monday, December 31, 2007
12.ஆலகால விஷத்தையும்
Posted by ஞானவெட்டியான் at 6:41 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment