Monday, December 31, 2007

11.கற்பகத் தருவைச் சார்ந்த

விவேக சிந்தாமணி
**********************

11.கற்பகத் தருவைச் சார்ந்த காகமு மமுத முண்ணும்
விற்பன விவேகமுள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்
இப்புவி தன்னிலென்றும் இலவுகாத்திடும் கிளிபோல்
அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வ தரிதரி தாகுமம்மா.

கற்பகத்தருவில் இருக்கும் காகமும் அமிர்தம் உண்ணும்.
அறிவுள்ள அரசனைச் சார்ந்த எளியவரும் வாழ்வு பெறுவர்.
இலவு காத்த கிளி காய் பழுக்கும் பழுக்குமென சபலமடந்து இர்ப்பதைப் போல அற்பரைச் சார்ந்தோர் உலகில் வாழ்வது அரிதினும் அரிதாகும்.

2 Comments:

Anonymous said...

என்ன ஞானவெட்டியான்,

ஏதாச்சும் ரிக்கார்ட் கிரியேட் பண்ற உத்தியா..

தமிழ்மணம் முகப்பு பக்கம் முழுசும் உங்க பதிவா இருக்கு..

ஆனாலும் எல்லாமே நல்லாருக்கு..

வாழ்த்துக்கள்..

Anonymous said...

அன்பின் ஜோஸப்,

என்னிடமிருக்கும் சரக்குப் பொதியை எல்லாம் என் வலைப்பூவில் இறக்கி வைக்கிறேன்.

வேண்டுமென்பவர் படித்துக் கொள்ளட்டுமே!

இனிமேல் ரிக்கார்டு கிரியேட் பண்ணி என்ன ஆகப்போகுது.

பின்னூட்டு வந்தால் விடையிறுக்கிறேன்.

இல்லையெனில், நான் உண்டு, என் வேலை உண்டு.
அவ்வளவுதான்.