விவேக சிந்தாமணி
*********************
115.மதியிலாமறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே
இருதுவதுகாலந்தன்னில் தோடமென்றுரைத்தேயாற்றில்
புதுமையா யெடுத்தபோது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன் கடியுண்டன்றே யருநர கடைந்தான்மாதோ.
மதியிலா=அறிவற்ற
மறையோன்=வேதங்களைக் கற்றறிந்தவன்
இருதுவதுகாலந்தன்னில்=பருவமடைந்த காலத்தே
தோடம்=கேடு
அதிர்=நடுக்கம்,அச்சம்
முன்னொரு காலத்தே அறிவற்ற வேதியன் ஒருவன், தன்னிடம் கல்வி பயின்ற மன்னன் மகளின் அழகில் மயங்கி, அவளை அடையவேண்டி முயன்று தோற்று, அவளைச் சூழ்ச்சியால் அடைய எண்ணி, அவளின் இருது காலப்படி அவளுக்குத் தோடம் இருப்பதாகவும், அதனால் அவளைப் பெட்டியில் அடைத்து ஆற்றில் விட்டு விடுக என்று மன்னனிடம் கூறி அவனை அங்ஙனமே செய்ய வைத்தான். பின்னர் அப்பெட்டியைத்தேடி வெகுதூரம் சென்றான். அதற்குள், ஆற்றின் கரையில் வந்த ஒரு அரசன் பெட்டியைத் திறந்து அதற்குள்ளிருந்த இளவரசியை மீட்டுப்பின் அப்பெட்டியினுள்ளே ஒரு புலியை அடைத்து அனுப்பினான். அது அறியாது வேதியன் பெட்டியைக் கண்டு மகிழ்வுற்றுத் திறந்தான். அங்கிருந்த புலியைக்கண்டு அஞ்சி நடுங்கினான். அப்புலியும் வேதியனைத் தின்றது; அவனும் நரகம் அடைந்தான்.
ஒருவன், (பெண் வேட்கையால்) ஒருவருக்குத் தீங்கிழைத்தால் அவன் இறந்து நரகம் எய்துவான்.
Monday, December 31, 2007
115.மதியிலாமறையோன் மன்னன் மடந்தையை
Posted by ஞானவெட்டியான் at 11:02 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
காலத்துக்கு ஏற்ற தன்டனை
மிகுந்த அறிவாளித்தனமான சிலரின் செயல்களுக்கும், பெண் பித்துக்கும், முடிவு இப்படித்தான் இருக்குமோ?
ஆமாம்.
நீதிக்குப் புறம்பான செயல்கட்கு ஒரு எச்சரிக்கை.
Post a Comment