Monday, December 31, 2007

114.நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை

விவேக சிந்தாமணி
**********************
114.நட்பிடைக் குய்யம் வைத்தார் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தார்

கட்டழற் காமத்தீயாற் கன்னியைக் கலக்கினோரும்
அட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான்
குட்டநோய் நரகந் தம்முட் குளிப்பவ ரிவர்கள் கண்டாய்.

குய்யம் - வஞ்சனை
நலம் - அழகு
சேர்ந்தார் - கூடிக் குலவியவரும்
கட்டழல் - மிகுதியான நெருப்பு
கலக்கினோர் - கற்பழித்தோர்

நட்பு மிகுந்த இடத்தில் வஞ்சனை புரிந்தவனும், பிறன் மனைவியின் அழகில் மயங்கி அவளுடன் கூடி அநுபவித்து மகிழ்ந்தவனும், காமத்தீயால் வெந்து உந்தப்பட்டு கன்னியைக் கூடிக் கற்பழித்து, அவள் மனம் கலங்கப் பின் அவளை மணம் செய்ய மறுத்தவனும், ஒரு உயிரின் உடலைக் கொன்று இறைச்சியைத்(கசாப்பு) தின்பவனும், அமைச்சனாய் இருந்து அரசனைக் கெடுத்தவனும், ஆகியோர் இப்பிறவியில் கொடிய தொழு நோய்கண்டு வருந்தி மறு பிறவியில் நரகில் மூழ்குவராம்.

5 Comments:

Anonymous said...

இவ்வளவு செய்த பின் அவன் மனிதனா? அவனுக்கு அறிவுரை எல்லாம் தேவையா என்ன?
தேறாத கேஸ் என்று விட்டுவிட வேண்டியது தான்.

Anonymous said...

அப்படியே ஆகட்டும்

Anonymous said...

//ஒரு உயிரின் உடலைக் கொன்று இறைச்சியைத்(கசாப்பு) தின்பவனும்,//
:-)

Anonymous said...

ஆடு, கோழி, மீன் முதலியவைகளைக் கொன்று இறைச்சியைத் தின்னும்....

Anonymous said...

எத்தனைவிதமான கொடுமைகள்....குமார் கூறியது போல, இது போல கேஸ்களை புறக்கணிக்க மட்டுமே முடியும்.