Monday, December 31, 2007

113. உயிரனை யானுடன் கலந்த உளவறி

விவேக சிந்தாமணி
********************
113. உயிரனை யானுடன் கலந்த உளவறிந் தீண்டெனை

.............மணந்தோ னுடன்றிச் செய்கை
செயலென யென்றிலை மறைகாயெனத்
............துணிவதா லிருவரையுந் தீதென்
றயில்விழியாய் மயற்போது வூழ்வலித்தினும்
...........பெண்மதி யெனது வூழின்
இயலென வள்ளுவ ருரைத்தார் சான்று
...........நீயெனப் புகன்றே னின்புற்றானே.

வேல் போன்ற கூரிய கண்களை உடைய தோழியே! எனது உயிரினும் சிறந்த ஆசைநாயகனுடன் நான் கூடிக் குலவி வரும் மருமத்தை என் கணவன் இலை மறை காயென அறிந்து பின், என் மீது சினங் கொண்டு இப்படிப்பட்ட இழிவான காரியம் செய்யத் துணிந்தமைக்குக் காரணம் யாதென வினவ, அப்பொழுது உண்டெனினும் இல்லையெனினும் எனக்குத் தீங்காகவே முடியும் என சிந்தித்து, காமம் பொதுவெனவும், தலையில் எழுதிய எழுத்து தவறாது எனவும் கூறினேன். அவர், முன்னிலும் அதிகக் கோபங்கொண்டு, விதியை மதியால் வெல்ல முடியாதா? என்று கேட்டான். அதற்கு, "ஐயோ! பெண் புத்தி பின் புத்தி அல்லவா? ஆண்களுக்கு சிறந்த புத்தி உண்டே! மேலும் இதற்கு சாட்சி தாங்களாக இருக்க வேறு தேடுவதேன்?" என்றேன். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். இதை அறியாயோ?

கயல்விழி இழிமாதர் சொல்லை ஆராயாமல் அப்படியே நம்பலாகாதே!

4 Comments:

Anonymous said...

எனக்கு.. கொஞ்சம் குழப்புகிறது.
விளக்கத்தில் எங்கோ இடிக்கிறது ஐயா.

Anonymous said...

ஆசைநாயகனுடன் மனைவி கூடிக் குலவி வரும் மருமத்தைக் கணவன் இலை மறை காயென அறிந்து, அது பற்றி மனைவியிடம் கேட்பது தவறு. கையும் மெய்யுமாய்ப் பிடித்தபின் நிரூபித்தல் வேண்டும்.

கயல்விழி இழிமாதர் சொல்லை ஆராயாமல் அப்படியே நம்பாதே!

இப்பொழுது இடிக்காதே!

Anonymous said...

இடிக்கலை..நன்றி

Anonymous said...

மகிழ்ச்சி