Monday, December 31, 2007

116.மையது வல்லியம்வாழ் மலைக்குகை

விவேக சிந்தாமணி
********************
116.மையது வல்லியம்வாழ் மலைக்குகை தனிற்புகுந்தே
ஐயமும் புலிக்குக் காட்டி யடவியிற் றுரத்தும் காலை
பையவே நரிக்கோளாலே படுபொரு ளுணரப்பட்ட
வெய்யவம் மிருகந்தானே கொன்றிட வீழ்ந்ததன்றே.

மையது=ஆட்டுக்கிடாவானது
வல்லியம்=புலி
அடவி=காடு
வெய்ய=கொடிய

ஓர் ஆட்டுக்கடா, புலியிருக்கும் குகைக்குள் புகுந்து, அச்சம்தரும் கொடிய விலங்கைப்போல் நடித்தது. அந்த உருவங்கண்டு புலியும் பயந்து குகையை விட்டு ஓடியது. அப்பொழுது அங்கு வந்த வந்த நரி புலியை நோக்கி,"இந்த அற்பமான ஆட்டைக் கண்டு ஏன் பயந்து ஓடுகிறாய்" என்று கோள் சொல்லப் புலியானது ஆட்டின் நடிப்பாகிய செயலைக் உணர்ந்து திரும்பிச்சென்று ஆட்டின்மீது பாய்ந்து கொன்றழித்தது.

ஆகவே இதுபோன்று நடிப்பாகவேனும் செய்யத்தகாத செயல் செய்வோருக்கு (கேடு வரும்)அழிவு உறுதி.

3 Comments:

Anonymous said...

// நடிப்பாகவேனும் செய்யத்தகாத செயல் செய்வோருக்கு (கேடு வரும்)அழிவு உறுதி//

அப்படின்னா நம்ம நடிகர்கள் எல்லாம் ஒரு வழியாக போறாங்கன்னு சொல்லுங்க...

Anonymous said...

இதெல்லாம் பாட புத்தகத்தில் இருந்து எப்படி ஒழிந்தது?
ஹூம்!

Anonymous said...

அன்பு குமார்,
காலத்தின் கோலம்