ஓடும் ஐந்து - சுய சொறிதல்?
***************************
இந்த ஆட்டங்கள் எனக்குப் பிடிபடவில்லை. நண்பர் கோவி.கண்ணன் அழைப்புக்கிணகி ஏதோ 5 தருகிறேன்.
1.கொடிது - இளமையில் வறுமை:
இதுதான் பள்ளிப்பருவம்.
2.இறகு முளைத்தது -
பறவை பறந்தது - பறனை(விமான)ப் படைக்கு.
3.வாலிபப் பருவம்-
5 ஆண்டுகள் கழித்து வந்து வங்கிப் பணி. திருமணம். ஆன்மிகத் தேடல்; தேடலில் ஏமாற்றம் ...........
4.என்னை நானே நொந்துகொள்ளும் வேளை-
வலைப்பதிவில் ஒரு சமயத்தினரை மற்றவர் இகழ்ந்து எழுதி மற்றவர் மனம் நோகும்போது. என் கோட்பாட்டில் இருந்து நான் வெளியே வரமாட்டேன்; இது தான் உயர்ந்தது; மற்றவை இழிமதம்; எனத் தூற்றும் போது.
5.வேண்டுகோள்-
தன்னுடைய சமயத்தில் என்னென்ன நல்லவைகள் இருக்கின்றன என்று மட்டும் தெளிவாக எடுத்துரைத்தால் போதுமென நினைக்கிறேன். சாதிச் சண்டைகள் முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒன்று.
இறுதி வேண்டுகோள்:
//"வாழும் சித்தர் ஞான வெட்டியான் ஐயா"//
நான் ஒரு பித்தன்; கேவலன்மான மனிதப் பிறப்பு. அவ்வளவே!
அடுத்த அழைப்பு:
யாரெல்லாம் விட்டுப்போயிருக்கிறார்களோ, அவர்களெல்லாம்....
Sunday, March 25, 2007
ஓடும் ஐந்து - சுய சொறிதல்?
Posted by ஞானவெட்டியான் at 11:27 AM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
//இறுதி வேண்டுகோள்:
//"வாழும் சித்தர் ஞான வெட்டியான் ஐயா"//
நான் ஒரு பித்தன்; கேவலன்மான மனிதப் பிறப்பு. அவ்வளவே!//
ஈசனையே பித்தன் என்றுதான் சொல்கிறோம், உங்களை நீங்கள் சொல்வதும் அவ்வழியோ ? நான் சொன்ன வாழும் சித்தர் கூட பித்தனுக்கு சிறிய பெயராகத் தெரியும். அனைத்தையும் உணர்தவர் பெயரை பெரிதாக நினைக்க மாட்டார் என்று சொல்கிறது உங்கள் இறுதி வேண்டுகோள்.
இதிலும் தன் அடக்கம் !!!!
:)))
எப்படியாகிலும் அழையுங்கள். பரவாயில்லை.
எது எப்படியிருப்பினும் நோக்கம் எப்படியோ, நோக்கும் அப்படித்தான்.
அடங்கத்தான் வழி தேடிக்கொண்டுள்ளேன்.
ஐயா!
4, 5 எனக்கும் வருத்தம் தருபவை!!; நீங்கள் ஞானச்சித்தர்...ஐயமில்லை.
சிறியோராகிய எம்முடனும் நீங்கள் சமமாகப் பழகுவது; உங்கள் பெருந்தன்மை!
அன்பு யோகன்,
சரி். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நன்றி.
அதெல்லாம் விடுங்க!!
உங்களுக்கு கிடைத்த நண்பர்களின் உதவியை
Technical Advisor என்ற அடைமொழி போட்டு நன்றிக்கடன் சொல்லியுள்ளீர்களே "அது பிடித்திருக்கு"
பொருமையுடன் சொல்லிக் கொடுத்ததற்கு இதுகூடத் தரவில்லையெனில் என்ன ஆவது?
Post a Comment