அன்புடையீர்,
ஏதோ! "PODCASTING" அப்படியெனச் சொல்லுகிறார்களே? அது என்ன? என என்னுள்ளே எழுந்த கேள்விகளுக்காகக் கூகுள் ஆண்டவரை அழைத்தேன். உள்ளே நுழைந்து தேடும்போது கிட்டியவைகளை அசைபோட்டபோது, "நாமும் ஏன் ஒன்று உருவாக்கக் கூடாது?" என்னும் வினா என்னுள்ளே எழுந்தது. அதன் விளைவே இந்த "CINPOD".
வழக்கிழந்த காவியங்களை உயிர்ப்பிக்கும் என் கொள்கைக்கு இதைப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். 1940 முதல் 1980 வரை முத்துமுத்தான திரையிசைப் பாடல்கள் வந்துள்ளன. எழுதியவர்களுள் என் உள்ளங்கவர்ந்தவர்கள் இருவர்; ஒருவர் பட்டுக்கோட்டையார்; இன்னுமொருவர் கவிஞர் கண்ணதாசன். இவ்விருவருமன்றி, உடுமலை நாராயணகவி, மருதகாசி ஆகியோரின் காலத்தால் அழியா காவியங்களுக்கு இன்னிசை அமைத்தவர்கள், G.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள், R.சுதர்சனம், A.M.ராஜா, T.R.பாப்பா, T.G.லிங்கப்பா, இன்னும் பலர்.
இவ்வினிய பாடல்களை, "செவிக்கினிய பாடல்கள்" என்னும் வலைப்பூவில் பிட்டுப் பிட்டு இட்டுவந்தாலும், அவைகளை ஒருங்கிணைத்து இங்கே தாரலாம் என்பது என் அவா. எப்பொழுது வேண்டுமானாலும் ஒட்டுமொத்தமாகக் கேட்டு மகிழுங்கள்.
Tuesday, January 30, 2007
திரையிசை கேட்க CINPOD
Posted by ஞானவெட்டியான் at 12:12 PM
Labels: ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ஐய்யா,உங்கள் பதிவில் உள்ள சினிபோடை சொடுக்கினால் பின்னூட்ட பெட்டிக்கு போகிறதே!!
அது அப்படித்தானா?
அன்பு குமார்,
CINPOD பெட்டியின் இடது மூலையில் MUSIA என்னும் டாக் உள்ளது. அதை அழுத்த மெனு விரியும். பின்னர் அப்பாட்டைச் சொடுக்கிக் கேட்டு மகிழுங்கள்.
ஆகா.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெரிந்தா ஞானவெட்டியான் ஐயாவா இது? தொழில்நுட்பத்தில் கலக்குகிறீர்கள் :-) வாழ்த்துக்கள்.
அன்பு சேதுக்கரசி,
அதே ஞானவெட்டியான் தான்!!
தொழில் நுட்ப உதவி கிடைக்காததால் என் காலத்தைச் செலவிட்டு நானே முயன்றுதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
"நான் இன்னும் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே யிருக்கிறேன்!"
Post a Comment