Saturday, January 13, 2007

பொங்கலுக்குத் தயாராகிறேன்

ஆண்டுக்கொருமுறை வரும் பொங்கல் ஏன் வருகிறது?
வீட்டில் உள்ள பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்றை சேர்ப்பதற்கும்தான்!

"குடிசை வீட்டில் உள்ள கூரை ஒழுகுகிறது; சூரியன் தாராளமாக உள்ளே வருகிறான் என நானும் சொல்லிக்கிட்டே இருக்கிறேனே! காதில் விழவில்லையா?" என்று குறையிடும் மனைவி.

"கவலைப்படாதே! என் கோமளமே! பொங்கல் வரட்டும்; செய்து விடுவோம்" எனும் கணவன். எப்படிச் செய்வது?

வெள்ளாமை விளைஞ்சு விலைக்குப் போட்டு வரும் பணத்தை என்ன செய்வது?
பயிர் விளைந்து பணம் வந்துவிட்டது; காரணமாயிருக்கும் சூரியனுக்குப் பொங்கல். அதைச் சாக்காக வைத்து குடிசையை சீர்திருத்தியாகிவிட்டது. உடைந்த மண்திண்ணைக்கு ஒட்டு; சாணம் மஞ்சள் கரைத்து மெழுகி சீர்பார்த்தாகிவிட்டது. வெள்ளை அடித்துவிட்டாகிவிட்டது. பெண்னுக்கு வரன் பார்த்தாகிவிட்டது; பொங்கல் முடிந்த கையோடு திருமணம் நிச்சயித்தாயிற்று.

மனைவியின் மஞ்சள் முகத்தில் ஒளிவீசுகிறது; அவ்வளவு பூரிப்பு.
இவ்வளவு காரியம் பார்த்தாகிவிட்டது.

அதனால், நாளைக்கு நண்பர்கள், சுற்றத்தார் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்வதை ஒத்தி வைத்துவிட்டு ஓய்வெடுப்பது நல்லதல்லவா?

12 Comments:

இலவசக்கொத்தனார் said...

ஐயா,

திருத்துவதாக நினைக்காதீர்கள். இன்று வலையுலகில் ற,ர குழப்பங்கள் அதிகம் இருக்கிறது. அதனால் படிப்பவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாமென்பதற்காகவே சொல்கிறேன்.

//குடிசை வீட்டில் உள்ள கூறை ஒழுகுகிறது; சூரியன் தாராளமாக உள்ளே வருகிறான் என நானும் சொல்லிக்கிட்டே இருக்கிறேனே! //

கூறை என நீங்கள் குறிப்பிட்டு இருப்பது கூரை என்றே இருக்க வேண்டும்.

கூரை 1. sloping roof, commonly thatched with grass or palm; 2. small hut, shed, cottage
கூறை 1. cloth, clothes, garment

தாங்கள் துணிமணி என்ற பொருளில் சொல்ல வரவில்லை என்றே நினைக்கிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்பு இலவசக்கொத்தனார்,
தவறுதான்; தப்பல்ல.
கொத்துப்பிழை. தவறிக் கொத்திவிட்டேன்.
ஆயினும் தவறானாலும் தவறே!
"கூரை" என்றுதான் இருத்தல் வேண்டும்.

அரை பிளேடு said...

பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
தங்கள்"குடிசை வீட்டில் உள்ள கூறை ஒழுகிறது" என்னும் வரியைப் படித்ததும் ; நீங்கள் "கூரையை" த்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிந்தது.எனினும் கூறை என்பது சேலயை ஒட்டிய சொல்- ஈழத்தில் மணப் பெண் தாலிகட்டும் போது கட்டும் சேலையைக் கூறை என்போம்.பொங்கலுக்குப் புதிதெடுக்கும் வழக்கமும் உண்டு. அத்துடன் ஒழுகுதல் என்பது பீத்தலால்;கிளிசலால் ஏற்படுவது தானே!!
மனைவி புதுச்சேலை கேட்டதை மறைமுகமாகக் கூறுவதாக நினைத்தேன். எனினும் சூரிய ஒளி வெளிச்சம் போட்டுக்காட்டியது.
யோகன் பாரிஸ்

ஞானவெட்டியான் said...

சரி செய்து விட்டேன்.
நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு அரைபிளேடு,
நன்றி.
எங்களின் பொங்கல் வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு யோகன்,
அது "கூரை"தான். கொத்துப் பிழை. ஒரு விரலால்தானே கொத்தத் தெரியும்!
தவறு தவறுதான்!

வல்லிசிம்ஹன் said...

ஞானவெட்டியான் அய்யா,
உங்களுக்கும் குடும்பத்தினரௌக்கும்ம்குர்ரையைப் பிய்த்துக்கொண்டு இன்பமும் ஆரோகியமும் கிடைக்கவேண்டுகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்பு வல்லிசிம்ஹன்,
ஆரோக்கியம் மட்டும் கிட்டினால் போதும்.
மிக்க நன்றி.

மங்கை said...

ஐயா

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

மங்கை

மங்கை said...

ஐயா

பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

மங்கை

ஞானவெட்டியான் said...

அன்பு மங்கை,
நன்றி.
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.