Wednesday, January 31, 2007

கட்டாய மாற்றம்

ஐயகோ!!
இது என்ன கொடுமை?
நாட்டில்தான் கட்டாய மதமாற்றம் என்றால் BLOGGERம் அதில் இறங்கிவிட்டதே!
நான் என் பாட்டுக்கு இருந்த வலைப்பூவில் என்னுடைய இடுகைகளை இட்டுவந்தது Bloggerக்குப் பிடிக்காமல், அதுவே என் வலைப்பூவை மாற்றித்தருகிறேன் என்று சொல்லி மாற்றிவிட்டது. அதையும் ஒழுங்காகச் செய்யாமல் நன்றாய் தெரிந்துகொண்டிருந்த தமிழ் எழுத்துக்களை திஸ்கி மாதிரி் ஆக்கிவிட்டது.

ஐயா, தொழில் வல்லுனர்களே! என்ன செய்தால் என் வலைப்பூவில் யூனிகோடு எழுத்து தெரியும்? செவிக்கினிய பாடல்கள் வலைப்பூவைப் பார்த்து நல்வழிப்படுத்துங்களேன்.

2 Comments:

கோவி.கண்ணன் said...

ஐயா,

எழுத்துரு நன்றாகத்தான் தெரிகிறது !

ஞானவெட்டியான் said...

அன்பு கண்ணன்,
கோளாறு இவ்வலைப்பூவில் இல்லை. "செவிக்கினிய பாடல்கள்" பதிவில்தான்.
சற்றே கவனியுங்கள். அதிலும் Comments முழுவதும் வேறு விதமாகத் தெரிகிறது.