சுதந்திரம்
*************
தனி மனிதனின் சுதந்திரம் எது வரை?
சாலையில் மனிதர்கள் அனைவரும் சாரிசாரியாய் நடக்கின்றனர். அது அவர்களின் உரிமை.
மழை வருமென நினைத்து குடையை ஒருவர் கையில் கொண்டு செல்கிறார். அது அவரின் சுதந்திரம்.
சிறிது தொலைவு கழித்துக் கை வலிக்கிறதெனக் குடையைத் தன் கக்கத்தில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அது அவரின் சுதந்திரம்.
ஆனால், அச்சுதந்திரத்தின் எல்லை என்ன?
கக்கத்தில் உள்ள குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான்!
Thursday, October 19, 2006
சுதந்திரம்
Posted by ஞானவெட்டியான் at 8:00 AM
Labels: பின்னூட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
அய்யா,
//கக்கத்தில் உள்ள குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான்! //
அருமை.
நன்றி.
அய்யா,
//கக்கத்தில் உள்ள குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான்!//
மிகச் சரியாக சொன்னீர்கள், இது போன்றுதான் தாங்களின் எண்ணங்களின் மூலமாக இங்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வளரும் நிலையில் இளையவர்களை வழி நடத்தி செல்ல வேண்டும்.
உங்களுக்கு வயதும், ஞானமும் இருக்கிறது, கூறுவதற்கும் வழி நடத்தி சொல்வதற்கும் விரும்பி கேட்பவர்களுக்கு...
நன்றி, ஐயா!
தெகா.
உண்மைதான் ஐயா.அடுத்தவர் மூக்கு நுனி தான் நம் சுதந்திரத்தின் எல்லை.இதை நாம் உணர்ந்தாலே இங்கு நடக்கும் அடிதடிகள் குறைந்துவிடும்
அன்பு சிவபாலன், தெகா,
மிக்க நன்றி.
நல்லாச் சொலிட்டீங்க அண்ணே.
அடுத்தவனை உபத்திரவிக்காத வரை
எல்லாம் நலமே.
'சொல்லிட்டீங்க'ன்னு படிங்க அண்ணே.
தமிழ் என்னைப் பாடாப் படுத்துது:-)))
ஆமாம் செல்வன்,
அதுதான் உண்மை.
"எதைக் கொட்டினாலும் அள்ள இயலும்; ஆனால், சொற்களைக் கொட்டிவிட்டால் அள்ளவியலாது."
அன்புத் தங்கை துளசி,
உண்மை அதுதான்.
ஆமாம். தமிழ் எங்கே பாடாப் படுத்துது?
தமிழ் அல்லவா படுத்தது.
ஐயா,
//அச்சுதந்திரத்தின் எல்லை // என்பதற்க்கு செல்வம் அவர்களின்
//அடுத்தவர் மூக்கு நுனி தான் நம் சுதந்திரத்தின் எல்லை//
பதில் அருமை. இப்படியே எண்ணி தான் பின்னூட்டமிட வந்தேன். வலையகம் மிகப்பெரிது.
புது தளம்நன்றாக உள்ளது
Post a Comment