நண்பர் சதயம் தன் "இயன்றவரை இனிய தமிழில்" எழுதியதற்கு,
//சில பெரிசுகளும்...ரிட்டயர்டு ஆசாமிகளும்.அவர்கள் இம்சைகளும்...ஹி..ஹி..பெரிசுன்னா அப்படித்தான் இருக்கும் கண்டுக்கக் வேணாம் விட்ருவோம்.நம்மள விட்டா அவுகளுக்கு யார் இருக்கா..புள்ளயில்லாத வீட்ல கெளவன் துள்ளிக் குதிக்கறான்னு கண்டுக்காம விட்ருவோம்...ஹி..ஹி....//
ஒன்று சொன்னீர்; நன்று சொன்னீர்.
தமிழ்மணத்தில் "அதுகளுக்கு" என்ன வேலை? இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
Thursday, October 19, 2006
தமிழ்மணம் வம்பு மடமா? இல்லை!
Posted by ஞானவெட்டியான் at 7:58 AM
Labels: பின்னூட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
வருகைக்கு நன்றி பெரியவர் ஞான வெட்டியான் அவர்களே!
நிச்சயமாய் உங்களை போன்ற பெரியவர்களை மட்டம் தட்டும் தொனியில் எழுதவில்லை....உரிமை கலந்த அன்பின் வெளிப்பாடே!
உங்களுக்குத் தவறாய் பட்டிருப்பின் வருந்துகிறேன்.
அய்யா,
அவர் யாரை குறிப்பிட்டு எழுதினார் என தெரியவில்லை.
எனினும் நான்கள் சிறுவர்கள், எங்கள் பிழை பொருத்து, மீன்டும் நீங்கள் எழுதவேண்டும்.
இது என் வேண்டுகோள்.
நன்றி.
முந்தைய பின்னூட்டம் எனது பதிவில் தங்களுக்கு பதிலாய் இட்டது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் புண்படுத்துவதற்காக அந்த வரிகளை எழுதவில்லை....தவறாய்ப் பட்டிருந்தால் இந்த 'சிருசை' மண்ணிக்கவும்.
சதயம்
(எதிர் கால பெருசு)
சரி அதுக்கு என்ன செய்ய வேன்டும் சொல்லுங்க கன்னு
வருகைக்கு நன்றி பெரியவர் ஞான வெட்டியான் அவர்களே!
நிச்சயமாய் உங்களை போன்ற பெரியவர்களை மட்டம் தட்டும் தொனியில் எழுதவில்லை....உரிமை கலந்த அன்பின் வெளிப்பாடே!
உங்களுக்குத் தவறாய் பட்டிருப்பின் வருந்துகிறேன்.
அன்பு சதயம்,
மன்னிக்கவும். சிறிதே உணர்ச்சி வயப்பட்டுவிட்டேன்.
ஏற்கெனவே புண்பட்ட இதயம்; சிறு பீலி இறகு பட்டது கூட பொறுக்க முடியவில்லை.
இத்துடன் இவ்விடுகை முடிக்கப்பட்டது.
அன்பு (கில்லி அல்ல) கிள்ளி(நல்ல தமிழ்ப்பெயர்),
தலைப்பே கூறுமே என் முடிவை!
அத்துடன் "கன்னு" அல்ல "கண்ணு"
ஐயா,
தயவு செய்து நீங்கள் கூறிய பெரிய வார்த்தைகளை திரும்பப் பெறுங்கள்...
மனம் நிறைந்து,நெகிழ்ந்து 'நல்லாயிரு'ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்கள்...என் போன்ற சிறியவர்களுக்கு அதுவே பெரும் பாக்கியம்.
மற்றபடி என்னுடைய பதிவிற்கு நீங்கள் வந்ததும்...பெருந்தன்மையாய் என்னை பொருத்தருளியதற்கும் மிக்க நன்றியுடையவனாயிருப்பேன்.
என்ன செய்வது, சதயம் அளவிற்கு திறமையாக, அறிவிப்பூர்வமாக , சிந்தனையை தூண்டக்கூடிய அளவில் எழுத இங்கு யாரும் இல்லையே!. அந்த வேதனையின் வெளிப்பாடாக அவரின் பதிவு இருந்திருக்கலாம். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளவேண்டாம். முடிந்தால் அவரை விட சிறப்பாக எழுதி அவரின் பாராட்டுகளைப் பெறுங்கள்.
அன்பு ஜெயகுமார்,
//என்ன செய்வது, சதயம் அளவிற்கு திறமையாக, அறிவிப்பூர்வமாக , சிந்தனையை தூண்டக்கூடிய அளவில் எழுத இங்கு யாரும் இல்லையே!. அந்த வேதனையின் வெளிப்பாடாக அவரின் பதிவு இருந்திருக்கலாம். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளவேண்டாம். முடிந்தால் அவரை விட சிறப்பாக எழுதி அவரின் பாராட்டுகளைப் பெறுங்கள்.//
தங்களின் சவாலுக்கு நன்றி. ஆமாம்.
என்ன செய்வது, சதயம் அளவிற்கு திறமையாக, "அறிவிப்பூர்வமாக" , சிந்தனையை தூண்டக்கூடிய அளவில் எழுத இங்கு யாரும் இல்லையே!.
இவ்வாறு எழுதுவதற்குமுன் என் இடுகைகளைப் படித்தபின் எழுதியிருப்பின் மகிழ்வேன்.
அத்துடன், எனக்கு "அறிவிப்பூர்வமாக" எழுத வராது. அறிவு பூரணமாகத்தான் எழுதத் தெரியும். நான் மற்றவரின் பாராட்டுக்களுக்காக எழுதுவதில்லை; ஏங்குவதுமில்லை.
அன்பு சதயம்,
தங்களின் அன்புக்கு நன்றி.
தங்கள் வலைப்பூவின் கொள்கைக்கேற்றவாறு கம்பன், பாரதி ஆகியோர் விட்டவற்றை நீண்ட காலம் எடுத்து இயம்பி இளைய தலைமுறைக்கு வழிக்காட்டாக வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.
கண்ணதாசன் ஒன்றைச் சொன்னார், 'போற்றுவோர் போற்றட்டும் புளுதியை வாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் அஞ்சேன்' என்று; அப்படித்தான் காய்த்தமரம் தான் கல்லடி படும்.
அன்பு என்னார்,
விட்டுவிடுவோம். சிறிதே உணர்ச்சி வயப்பட்டுவிட்டேன்.
நான்தான் இடுகையை முடித்துவிட்டேனே!
ஐயா,
கொஞ்ச நாட்களாக இங்கு என்ன நடக்கிறது என்பதே எனக்கு புரியவில்லை, புரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. எது எப்படியாகினும், எல்லாவற்றையும் தயவு செய்து மறந்து மன்னித்து தாங்கள் தொடர்ந்து இடுகைகள் கொடுக்கும் மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தெகா (நீங்கள் தான் முதன் முதலில் என்னை அப்படி அழைத்தீர்கள் :-)
அன்பு தெகா,
மறந்தாயிற்று. இடுகைகள் தொடரும்.
Post a Comment