இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம்!
***************************************
அன்புச் சகோதரர் சுவனப் பிரியனின் இடுகையைப் படித்ததும் எனக்குத் தோன்றியவை:
*****************************************
இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம் !
//நம்மை படைத்த இறைவனை எந்த சக்தியாலும் பூமியில் பார்க்க முடியாது.//
ஆம். உணரத்தான் முடியும்.
//அதற்கான சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று முன்பு பார்த்தோம்.//
கண்வழி சென்று கருத்தினில் கலந்தால் இறைவனை உணரமுடியும்.
"அத்தாற் பிறவி யவரிரு கண்களை
வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை
நித்தார மங்கே நினைக்கவல் லார்க்கு
எத்தாலுஞ் சாவிலை இறையவ னாமே."
(திருமூலரின் ஞானக்குறி - 30)
//யாரும் காணாதபடிக்கு இப்பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனே வணக்கத்திற்கு தகுதியானவன்.//
பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.
//மனிதர்களை விட உயர்ந்த தன்மை கொண்டவனைத்தான் நாமும் இறைவன் என்று வணங்க முடியும்.//
ஆம். அந்நிலைக்கு உயர நாம் முயலவேண்டும்.
//இலயாஸ்பாத்
இலயாஸ்பாத் 'பிரதி விகா பவித்திரஸ்தான்' என்று பண்டித ஸ்ரீராம் சர்மா ஆச்சாரியர் இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். 'பூலோகத்திலுள்ள புண்ணிய ஸ்தலம்' என்பது இதன் பொருளாகும்.//
புண்ணியத் தலம் நம் உடலின் தலையே ஆகும்.
//நபா ப்ரதிவியா
'நபா' என்பதன் பொருள் 'மையம்'. 'பிரதிவி'என்பதன் பொருள் 'பூமி'. 'நபா ப்ரதிவி' என்னும் பொழுது பூமியின் மையம் என்றாகிறது.//
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஆக, பூமியின் மையம் நம் தலையின் மையப்பகுதியே.
//ஜ+அம்பு+துவிப் = வாழ்வு + நீர் + தீவு = நீர் எங்கு கிடைக்கிறதோ அங்கு தான் வாழ்க்கை துவங்குகிறது.//
ஆம் நீரும் நெருப்பும் இல்லையெனில் உயிர்கள் வாழமுடியாது. நீரும் நெருப்பும் சேர்ந்துள்ள இடமே கண்கள்தான்.
//இந்து மத நண்பர்கள் ஆதி இறை இல்லத்தை முற்றிலும் மறந்தாலும் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம்கள் கஃபாவுக்கு செய்யும் வணக்கத்தைப் போன்று சில கிரியைகளை இன்றும் செய்து வருகிறார்கள். முஸ்லிமகள் அந்த கஃபாவை நோக்கி தொழுதும் ஏழு முறை சுற்றி வலம் வந்தும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் கேட்கிறார்கள். இதைத் தொலைக் காட்சியிலும் பல முறை பார்த்திருப்போம். இதே போல் இந்துக்களும் காஃபா வடிவில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் கட்டி அதில் துளசிச் செடி வைத்தும், ஊருக்கு ஒன்றிரண்டு கற்பக் கிரகம் (கோவிலினுள்) கஃபா வடிவில் சதுரமாக கட்டி அதனுள் விக்ரகங்களை வைத்தும் வணங்குகிறார்கள். அதனை வலமும் வருகிறார்கள். மேலும் திருமண விஷேஷ நாட்களில் அக்னி குண்டமும் (கஃபா வடிவில்) கட்டி அதில் அக்னி வளர்த்தும் அவைகளை வணங்கியும் வலம் வரவும் செய்கிறார்கள். //
பக்தி வழி செல்வோருக்கு அவைகள் ஏற்றவையே.
//'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'//
அறிவு, உணர்வு, நினைவு, கருத்து ஆகியவைகள் எல்லாமே இறைநிலைகள். அறிவு எடுக்கப்பட்டுவிட்டால் அறியாமைதான் மிஞ்சும். அறியாமையால் செய்யும் காரியங்களை ஒதுக்கி, அவர்களை நல்வழிபடுத்த முயலல்வேண்டும்.
//- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20
'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'//
ஆம் உணரத்தான் இயலும்.
//-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3
'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'//
இயற்கையே கன்சூல் மஹபியா என்னும் இருள்தான். இருளில் நுழைந்தால்தான் இயற்கையாகிய இறையை உணர இயலும்.
//-யஜீர் வேதம் 40 : 9
மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.//
பக்திவழி செல்வோருக்கு இவ்வாறு அறிவுறுத்தினால் துடுப்பு இல்லா படகைப்போல் அவர்கள் தத்தளிப்பார்கள்.
//இறைவனேமிக அறிந்தவன்//
ஐயமேதுமில்லை.
Thursday, October 19, 2006
இந்து மத வேதங்களில் காணப்படும் இறை இல்லம்!
Posted by ஞானவெட்டியான் at 8:01 AM
Labels: பின்னூட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
ஜயராமன்சொல்லுவது என்னவெனில் ...
மிகவும் அருமையாக பொருட்செறிவுடன் பதிந்துள்ளீர்கள். மிக்க நன்றி.
அந்த முதல் பதிவை பார்த்து குழம்பிப்போனேன். வேதமும், கீதையும் நபியை பற்றியும், கபாவை பற்றியும் சொல்லுகிறது என்பதே கேலிக்கூத்து. இது ஒரு அரசியல் நோக்கமுடையது. இதை நிராகரிக்கிறேன்.
ஆனால், எல்லா இறை நூட்களும் சொல்லுவது ஒரே ஆன்மீக அனுபவத்தை என்று தெளிவித்ததற்கு நன்றி
சுவனப்பிரியன்சொல்லுவது என்னவெனில் ...
Thanks for your comments Mr njaanavelvi.
Suvanappiriyan
நல்லா தான் எழுதி இருக்கிறியள்.
சகோதரர் ஞானவெட்டியான் அவர்களுக்கு!
பதிவை படித்து அதற்கு விளக்கமாக தனி பதிவாகவே போட்டமைக்கு நன்றிகள் பல. ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த கோணத்தில் பிரச்னையை அலசுவார்கள். அதன்படி தங்களின் கருத்தும் இருக்கிறது.
//கண்வழி சென்று கருத்தினில் கலந்தால் இறைவனை உணரமுடியும்.
"அத்தாற் பிறவி யவரிரு கண்களை
வைத்தார் நுனிமூக் கின்புரு வத்திடை
நித்தார மங்கே நினைக்கவல் லார்க்கு
எத்தாலுஞ் சாவிலை இறையவ னாமே."
(திருமூலரின் ஞானக்குறி - 30)//
நானும் அதே கருத்தைத்தான் சொல்கிறேன். இறைவனின் வல்லமையை அவனின் படைப்பாற்றலை மனிதர்களாகிய நம்மால் உணர முடியும். ஆனால் பார்க்க முடியாது.
'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'
-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3
//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.//
இது உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன். அண்டம் பிண்டம் என்று படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் எந்த கருத்துக்கும் வேதங்களின் ஆதாரம் வேண்டும்.
//புண்ணியத் தலம் நம் உடலின் தலையே ஆகும்.
இதுவும் உங்களின் சொந்த கருத்தே! இதற்கும் நீங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
//அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஆக, பூமியின் மையம் நம் தலையின் மையப்பகுதியே.
இதற்கும் தாங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
//ஆம் நீரும் நெருப்பும் இல்லையெனில் உயிர்கள் வாழமுடியாது. நீரும் நெருப்பும் சேர்ந்துள்ள இடமே கண்கள்தான்.//
இது அறிவியலாரின் கண்டுபிடிப்பா? அல்லது வேதங்களின் கருத்தாக இருந்தால் எந்த இடம் என்ற ஆதாரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.
//அறிவு, உணர்வு, நினைவு, கருத்து ஆகியவைகள் எல்லாமே இறைநிலைகள். அறிவு எடுக்கப்பட்டுவிட்டால் அறியாமைதான் மிஞ்சும். அறியாமையால் செய்யும் காரியங்களை ஒதுக்கி, அவர்களை நல்வழிபடுத்த முயலல்வேண்டும்.//
உங்கள் கருத்தே என் கருத்தும்.
'நன்மையிலும் இறை அச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.'
5 : 2 - குர்ஆன்
//இயற்கையே கன்சூல் மஹபியா என்னும் இருள்தான். இருளில் நுழைந்தால்தான் இயற்கையாகிய இறையை உணர இயலும்.//
இங்கு இருள் என்று வேதம் சொல்வது அறியாமை என்ற பொருளில். அறியாமையில் இருக்கும் ஒருவனை உண்மையை விளக்கி நேர் வழிப் படுத்த வேண்டும் என்பது இதன் கருத்து. ஆனால் தாங்கள் கொடுக்கும் விளக்கம் உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன்.
மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.//
//பக்திவழி செல்வோருக்கு இவ்வாறு அறிவுறுத்தினால் துடுப்பு இல்லா படகைப்போல் அவர்கள் தத்தளிப்பார்கள்.//
உண்மைதான்! அதனால் தான் இறைவன் ஒவ்வொரு சமூகத்துக்கும் இறைத் தூதர்களையும், இறை வேதங்களையும் துடுப்பாக கொடுத்து படகை சீராக்குகிறான். ஆனால் மனிதனோ தன் துடுப்பை அஜாக்கிரதையால் தவற விட்டு விட்டு இறைவன் முன் நஷ்டவாளியாகிறான்.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
14 : 4 - குர்ஆன்
//இறைவனேமிக அறிந்தவன்//
//ஐயமேதுமில்லை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோதரர் சுவனப் பிரியன் அவர்களுக்கு!
//ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த கோணத்தில் பிரச்னையை அலசுவார்கள். அதன்படி தங்களின் கருத்தும் இருக்கிறது.//
நான் எனக்கு என் அநுபவத்தால் புரிந்த கருத்துக்களைச் சொல்லுகிறேன்.
//அண்டத்தில் உள்ளது பிண்டத்தில். ஆக, பூமியின் மையம் நம் தலையின் மையப்பகுதியே. இதற்கும் தாங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.//
உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து.
(ஞானக் குறள் - 129)
ஈசன் எங்குமிருக்கிறான். பிரபஞ்சத்தில் இருப்பவன் நம் உடலில் இல்லாமலா போய்விடுவான்?
பிரபஞ்சம் - அண்டம்
உடல் - பிண்டம்
பிண்டதினுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு.
(ஞானக் குறள் - 77 )
//பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளவன் பிண்டமாகிய உடலின் தலையில் உள்ளான்.// இது உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன். அண்டம் பிண்டம் என்று படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் எந்த கருத்துக்கும் வேதங்களின் ஆதாரம் வேண்டும்.//
//புண்ணியத் தலம் நம் உடலின் தலையே ஆகும். இதுவும் உங்களின் சொந்த கருத்தே! இதற்கும் நீங்கள் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.//
'தேடியே அலையாதே சிங்கென்றேதான்
சிரத்திலங்குஞ் சிவசூட்சந் தெரிந்துபோகும்
மாடியே மங்கென்ற வெழுத்தைச்சேர்க்க
மரயோக சித்தியடா மனதுள்ளோர்க்கே"
(தெட்சணாமூர்த்தி ஞானச் சுருக்கம் - பாடல் 3)
"கண்டதிலே சூட்சமத்தைச் செப்பக்கேளு
கைலாசஞ் செவிநடுவே வட்டமப்பா
விண்டிடும யேசன்மனை யிடதுநேத்ரம்
விருதுபெற்ற ருத்ரன்மனை வலது நேத்ரம்
கொண்டதொரு மால்வீடு நாக்காமப்பா
கோகனக விதிவீடு மூக்காமையா
துண்டநுனி நடுவாக யெட்கடைக்கீழ்
தும்பிக்கை மூர்த்தியுட சூட்சந்தானே."
(போகர் ஞான சாராம்சம் - பாடல் 63)
இவையெல்லாம் சிரமாகிய தலையில்தான் உளது.
//ஆம் நீரும் நெருப்பும் இல்லையெனில் உயிர்கள் வாழமுடியாது. நீரும் நெருப்பும் சேர்ந்துள்ள இடமே கண்கள்தான்.//
இது அறிவியலாரின் கண்டுபிடிப்பா? அல்லது வேதங்களின் கருத்தாக இருந்தால் எந்த இடம் என்ற ஆதாரத்தை தந்தால் நானும் தெரிந்து கொள்வேன்.//
ஒரு பொருளைக் கண்களால் கூர்ந்து பாருங்கள், நண்பரே! கண்களில் தெரியும் வெப்பம். அதிலிருந்து ஒழுகும் கண்+நீர். நீரும், நெருப்பும் அங்கே இருப்பதை அறிவீர்கள்.
“அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.”
(திருமந்திரம் - 1834)
//இயற்கையே கன்சூல் மஹபியா என்னும் இருள்தான். இருளில் நுழைந்தால்தான் இயற்கையாகிய இறையை உணர இயலும்.//
இங்கு இருள் என்று வேதம் சொல்வது அறியாமை என்ற பொருளில். அறியாமையில் இருக்கும் ஒருவனை உண்மையை விளக்கி நேர் வழிப் படுத்த வேண்டும் என்பது இதன் கருத்து. ஆனால் தாங்கள் கொடுக்கும் விளக்கம் உங்களின் சொந்த கருத்து என்று நினைக்கிறேன்.?//
"இருளது சத்தி ஒளியதெம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யுமெம் ஆதிப் பிரானே."
(திருமந்திரம் - வயிரவி மந்திரம் - 1095)
//மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.
//பக்திவழி செல்வோருக்கு இவ்வாறு அறிவுறுத்தினால் துடுப்பு இல்லா படகைப்போல் அவர்கள் தத்தளிப்பார்கள்.//
// 'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'//
அவிறைத்தூதர்கள் நிறுவிய படிமங்களைத்தான் அவர்கள் வணங்குகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
நமக்குப் புரிந்து விட்டது. நம் வழியில் நாம் செல்வோம். அவர்களும் புரிந்தவுடன் நம்முடன் சேர்ந்துகொள்வார்கள்.
//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!//
நன்றி. நானும் ஆதரங்கள் தந்து விட்டேன் என நினைக்கிறேன்.
அன்பு ஜயராமன்,
//அந்த முதல் பதிவை பார்த்து குழம்பிப்போனேன். வேதமும், கீதையும் நபியை பற்றியும், கபாவை பற்றியும் சொல்லுகிறது என்பதே கேலிக்கூத்து. இது ஒரு அரசியல் நோக்கமுடையது. இதை நிராகரிக்கிறேன்.//
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்த நமக்கு,வேண்டுதல் வேண்டாமை ஆகியவை வேண்டாமே! விருப்பு, வெறுப்பு ஆகியவைகளை ஒதுக்கி வைப்போமே!
ஐயா, தங்களின் விளக்கம் மிக அருமை.
இரு துருவங்கள் ஒன்றாக சேராது அது இயற்கை.
அது மேலே இருப்பவன் எங்கள் இறைவன் என்பது அவர்கள் நம்பிக்கை.
எங்கும் இருப்பவன் இறைவன் என்பது நம் நம்பிக்கை.
கபாவை பார்ர்த்து நாங்கள் சுற்றுகிறோமா? சிவலிங்கமாகிய கபாவை அவர்கள் சுற்றுகிறார்களா?
சிவலிங்கத்தை கபா என நாம் ஒற்றுக்கொள்வோம்.
கபாவை சிவலிங்கம் சொன்னால் அவர்கள் தலையை கொய்யதான் வருவார்கள்
ஆதாரம் வேதத்தில் எங்கே அதை கண்ணால் கண்டு கடவுளை வணங்குவதற்கும், கடவுளை நம்முள் உணர்வதற்கும் வித்தியாசம் மிக அதிகம்
அன்பு கரி்கால் சிவா,
வருகைக்கு நன்றி.
//அது மேலே இருப்பவன் எங்கள் இறைவன் என்பது அவர்கள் நம்பிக்கை.
எங்கும் இருப்பவன் இறைவன் என்பது நம் நம்பிக்கை.//
"அவரவர்க்கு அதது".
//இரு துருவங்கள் ஒன்றாக சேராது அது இயற்கை.//
அதற்காகா சேராத் துருவத்தை இழுத்துப்பிடிக்கவேண்டாம் என்பதே எம் நோக்கம்.
ஐயா, இறைவன் எங்கோ உட்கார்ந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் வைத்து இயக்குகிறவன் என்பதல்ல நமது நம்பிக்கை. எங்கும் நிறைந்து எதிலும் உறைந்து இயக்குகின்றவந்தான் இறைவன். அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளிருப்பதுதான் கடவுள் என்பதே தமிழ். நீங்களும் அதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். மிகச் சரியான விளக்கம். ஆதாரம் இல்லாதவனுக்கு எந்த ஆதாரம் போதும்!!!!!!!! இதை விளக்கிக் கொண்டாலே போதும். விளங்குவார் யாரும் இல்லை என்பதே இன்றைய நிலை.
அன்பு இராகவன்,
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
அண்டசராசரங்களும் நீங்களும் நானும் கால்கரி சிவாவும் நானும் சுகவனப்ரியனும் விடாது கறுப்பும் மற்றும் எல்லா உயிர்களும் சேர்ந்ததுதான் கடவுள். இதில் எந்த ஒரு பாகமும் கடவுளின் ஒரு பகுதி. இந்த பூரணத்தை என்ன பெயரிட்டு அழைத்தாலும் சரி அல்லா என்றாலும் சரி சிவன் என்றாலும் சரி அவன் இல்லை என்று சொன்னாலும் சரி அனைத்தும் இறைவனே.
Aum Poornamadah Poornamidam
Poornaath Poornam Udachyathe
Poornasya Poornamaadaaya
Poornameva Vasishyathe.
Meaning: God is perfect (infinite).
This Universe is also perfect (infinite).
If perfection(infinity) is taken from anything perfect (infifinite)
what remains is still perfect (infinite).
Let there be peace, peace, peace.
அன்பின் சுப்ரா,
ஆமாம். அதுவே உண்மை.
அன்பு நண்பரே,
இறைவனே நேரடியாக வந்து மறைகளை மொழிந்ததாகச் சரித்திரம் இல்லை.
இறைத் தூதராய் இருப்பினும் நபிகள் நாயகமும் நம் முன்னோர்களில் ஒருவரே. அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளுபவர்கள், அதே போல் உள்ளதை ஏன் மறுக்கவேண்டும்?
வீண் விவாதம் கால விரையம்.
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
Anpu Ayyaa,
It is better not to argue. It will be a waste of time. In that time you can post some useful things.
Post a Comment