Thursday, October 19, 2006

எளிய தியான முறைகள்

எளிய தியான முறைகள்
**************************

பிரணாயாமம், மூச்சு பயிற்சி என்றால் என்ன?
***********************************************
இரண்டுமே ஒன்றுதான்.

இரேசகம்: 32 மாத்திரை அளவு

உயிர்க் காற்றை (வாசிக் குதிரையை) உள்ளே இழுத்தல்.

கும்பகம்: 64 மாத்திரை அளவு

அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.

பூரகம்: 16 மாத்திரை அளவு

அடக்கியதை மெதுவாக வெளிவிடல்.

மாத்திரை அளவு:

"கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்." – பவணந்தி

எடுத்துக் காட்டு: "சிவசிவ" - 4 மாத்திரை

பிராணாயாமம்:

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில்
நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை.

வளிப்பயிற்சி: மூச்சுப் பயிற்சி : வாசி யோகம்:

இவையெல்லாம் ஒன்றே.

ஆனால் வெளிக்காற்றை உள்வாங்கி வெளிவிடுவது இல்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக வெளிவிடுதலாம்.

நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.

இது கைவரத்தான் "ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து" சூரிய, சந்திர
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.

"ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து" சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.

இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக
(ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.

பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம்
இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ, கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே? சூனியம்தானே வேண்டும்.

ஞானக் குறள்
*******************
79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.

வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே பிறப்பறுக்கும் வழி.

இன்னுமொரு வழி:

தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?

மனமடங்கி ஒருநிலைப் படுதல். ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல். சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல். இனிய வார்த்தை சொல்லல்.

காலம் வீணாக்காமை. எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல். சும்மா இருத்தல் (சோம்பி அல்ல).

அகம்பாவமற்ற பணிவுடைமை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:

1.எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே...) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.

இதால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.

2. MEDITATION FOR DUMMIES
******************************
ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில்
நிறுத்தி, அந்த மூச்சு போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர, அக்கினி) தானாகவே கைவரும்.

இதையாவது செய்து பாருங்களேன்.

பி.கு: ஞானத்தினால் முத்திபெற்ற ஞானி இல்லை. நான் சென்ற வழியென்று கைகாட்டி மரம்போல் வழிகாட்டுகிறேன். அவரவர்க்கு அதது.
இதற்குக் காணிக்கை யாரும் அனுப்பவேண்டாம். காசு வாங்கினால் எனக்குப் பலிக்காது.

13 Comments:

Anonymous said...

//நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.//
பாம்பு எப்படி சார் மூச்சு விடுவதைக் கவனிக் முடியும் அது கிட்ட போய் கவனித்தால் நம் மூச்சல்லவா நின்று விடும். ஞானம் கேட்டால் எமனுலகுக்கல்லவா அனுப்பிவிடுவீர் போலிருக்கு?
ஒரு கருத்தை ஒரு நாளைக்கு விளக்காமாச் சொன்னால் தான் எங்களுக்கு விளங்கும் நீங்பாட்டுக்கு அள்ளிவிட்டால் எங்களால் பொருமையாக படிக்க முடியவில்லை.விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை. தினம் ஒன்றாக சொல்லுங்கள்

Anonymous said...

அண்ணே! ஞானவெட்டியான் அண்ணே!,

இன்னக்கி என்னோடு 18ம் அயிட்டத்தில பொலம்பியிருக்கிறதும் அதுதானண்ணே! பாக்கலியா?

வாசியென்றும் மவுனமென்றும் இரண்டு வித்தை
மகத்தான சாம்பவிகே சரியுமி ரண்டு
தேசியென்றால் யோகத்துக் காதிவித்தை
திறமான மவுனமென்றால் ஞானவித்தை
மாசியென்ற மனமுடைத்த விரண்டு மாகா
மருநின்றே அறிவறிந்தா லிரண்டு மாகும்
தூசியென்ற வெளியல்லோ அண்ட வீதி
கிரிகொண்டே ஆக்கி யேறுவ தெக்காலம்?

ஞானவெட்டியான் said...

அன்பு என்னார்,

//பாம்பு எப்படி சார் மூச்சு விடுவதைக் கவனிக் முடியும் அது கிட்ட போய் கவனித்தால் நம் மூச்சல்லவா நின்று விடும். ஞானம் கேட்டால் எமனுலகுக்கல்லவா அனுப்பிவிடுவீர் போலிருக்கு?//

தொலைவில் நின்று கவனிக்கலாமல்லவா? ஒரு மூச்சுக்கும் இன்னொரு மூச்சுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கவனிக்கச் சொன்னேன்.

//ஒரு கருத்தை ஒரு நாளைக்கு விளக்காமாச் சொன்னால் தான் எங்களுக்கு விளங்கும் நீங்பாட்டுக்கு அள்ளிவிட்டால் எங்களால் பொருமையாக படிக்க முடியவில்லை.விளங்கிக் கொள்ளவும் முடியவில்லை. தினம் ஒன்றாக சொல்லுங்கள்//

இதற்கே பொறுமை இல்லையெனில் ஞானம் எவ்வாறு கிட்டும். பொறுமை இன்றியமையாதது. ஒவ்வொன்றாகச் சொன்னால் தொடர்பு இருக்காது. நீங்களும் நாளை படிக்கலாமென விட்டுவிடுவீர்கள். என் கடின உழைப்பும், காலமும் வீணாகிவிடுமோ எனும் எண்ணம்தான்.

ஞானவெட்டியான் said...

அன்பு பொன்னம்பலம்,
வருந்தவேண்டாம். இன்னும் தங்களின் இடுகையைக் காணவில்லை. இப்பொழுது கண்டேன்.

//மருநின்றே அறிவறிந்தா லிரண்டு மாகும்//

ஆமாம். வெட்டாத சக்கரமாம் இரு கண்களும் மருவி நின்றால் அறிவு கிட்டும். அதை அறிய உணர்வு கிட்டும். உணர்வை உணர யோகமும், ஞானமும் ஒன்றுதான்.
அருமையான பாடல்.

Anonymous said...

ஞான வெட்டியான்,
பதிவு நல்லா இருக்கு. ஆனா கொஞ்சம் டோஸ் அதிகம். முயற்சி செய்யிற ஆசை வரமாட்டேங்குது. இதெல்லாம் நம்மால கத்துக்க முடியுமான்னு பிரமிப்பா இருக்கு. அதுக்குத்தான் நான் கைடட் மெடிட்டேஷன் போறது. அவங்க சொல்லச் சொல்ல அதே மாதிரி திரும்பச் செய்யறது ஈஸி பாருங்க. ஒரு பத்து நிமிஷ தியானத்திலயே மனம் நல்லா அமைதியாயிடுது ரொம்பப் பிரயத்தனப்படாம. இதைப் பத்தின என பதிவை நீங்க பாத்திட்டீங்க. பாக்காதவங்களுக்காக இங்கே தர்றேன்:

http://nilaraj.blogspot.com/2006/01/blog-post_18.html

இதுதான் சிறந்ததுன்னு சொல்ல வரலை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமுறை ஒத்துவரும். அதனால பல நல்ல வழிமுறைகளைப் பகிர்ந்துக்கலாம்ங்கறதுதான் என் எண்ணம்

ஞானவெட்டியான் said...

அன்பு நிலா,
//எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே...) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில்
ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. படிகம்தான் நல்லது. இல்லை!
இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்) வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.

இதால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.//

இதுகூட எளிமையாக இல்லையா?

Anonymous said...

பிராணாயாமம்:

இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில்
நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் செய்யப் பலனில்லை

(அல்லது)

மேலே கூறிய படியா? அல்லது இரேசகத்தில் (உள்ளே இழுத்தல்) தொடங்கி, கும்பகத்தை செய்து (உள்ளே நிறுத்தி) பூரகத்தில் தானே (வெளிவிடல்) முடிவடைய வேண்டும்? எது ஐயா சரியான முறை? மேலும் அவ்வாறு மூச்சுப் பயிற்ச்சி செய்யும் பொழுது இடது நாசி வழியாக சுவாச காற்றை உட்கொண்டு, வலது நாசி வழியாக (முத்திரை கொண்டு) விட வேண்டும்மென்றும், அடுத்த முறை அதற்க்கு எதிர்பதமாக அடுத்த நாசி மாற்றி இப்படியாக என்று எனக்கு கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் விளக்கம் தேவை, கொடுங்களேன்.

Anonymous said...

ஞான வெட்டியான்,
இது கேக்கறதுக்கு ரொம்ப எளிமையா இருக்கு. நான் எத்தனையோ முறை முயற்சி செய்து தோத்துட்டேன் :-(

இன்னும் அந்தளவு ஞானம் கூட வரலை. எனக்கு யாராவது இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கக் கொடுக்க செய்யற மெடிட்டேஷன் தான் சரியா வருது.(வெறும் மந்திரம்னா கூட நானே சொல்றதை விட சிடியைப் போட்டு பண்றது எளிதா இருக்கு) என்னைப் போல இன்னும் மக்கள் இருப்பாங்களேன்னுதான் சொன்னேன்.

ஞானவெட்டியான் said...

சரி, சரி.
நமக்குப் பசித்தால் நாம் தான் உண்ண வேண்டும்.
casset playerதான் தியானம் செய்தல்வேண்டும்.

Anonymous said...

தங்கள் விருப்பம்; ஒவ்வொன்று என்றால் படித்து செய்து பார்த்து மெதுவாக போகும் ஆனால் உங்களிடம் அத்தனை தத்துவங்களையும் கொடுத்தாக வேண்டும் சரி தாங்கள் அப்படியே செய்யுங்கள்

ஞானவெட்டியான் said...

அன்பு என்னார்,

பரவாயில்லை. என்ன? முடிக்க ஒரு ஆண்டாகும்.

Anonymous said...

முயன்று பார்த்தேன். முடியவில்லை. என்ன செய்ய?

ஞானவெட்டியான் said...

//முயன்று பார்த்தேன். முடியவில்லை. என்ன செய்ய?//

"முயற்சி திருவினையாக்கும்." இங்கு திருவினை என்பது ஞானவினையே. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். கஜினி முகமது திருப்பித் திருப்பிப் படையெடுத்துத் தான் வெற்றி கண்டான். மனந்தளராது முயலுங்கள்.