அன்புடையீர்,
தாழைலை போட்டு "இட்லிவடை" பரிமாரிய வைரஸ் விருந்து என்னைத்திகத்து நகைக்க வைத்தது. இப்பதிவில் என்னை நேரடியாக "கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்." என் அழைத்தைப் பாராட்டுகிறேன்.
இப்பதிவு சினமுறாது, மனமுவந்துஎழுதியது.
தங்களின் வருத்தம் புரிகிறது. ஏதோ தெரியாமல் வந்துவிட்டது என மன்னிப்பும் கோரியாகிவிட்டது. இன்னுமென்ன செய்ய வேண்டும்.
நான் உறங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை. மதியம் 2 முத 4.30 வரை.
ஓய்வு பெற்றவர்கள்தான் தொல்லை கொடுக்கவேண்டுமென்பதில்லை. தொல்லைகள் நிறைய இருக்கின்றது. சரமாரியாக வரும் வசைமொழிகள், போட்டி பொறாமைகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் மாந்தர் ஆகியோரின் படைப்புக்களுடன் என் படைப்பும் வெளி வருகிறது.
பின்னூட்டுக்கு அலைவது, மதிப்பெண் பெறுவது எமது நோக்கமல்ல. என் அநுபவத்தில் கிட்டியவற்றை, நானும் கடை விரிக்கிறேன். பிடித்தால் வாங்குங்கள். இல்லயெனில் அகன்றுவிடுங்கள்.
இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்களாகி விட்டடன. அதிலிருந்து காலையில் 3 அல்லது 4 பதிவுகள்தான் வரும். அதிலிருந்து புரிந்துகொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.
அடுத்தவரைத் தொல்லைக்குட்படுத்துவது எமது நோக்கமல்ல. இதுவே தொல்லையாயிருப்பின், அருள்கூர்ந்து தெளிவாகத் தெரியப்படுத்துங்கள். தமிழ்மணத்திற்குத் தொடுப்பு கொடுப்பதை நிறுத்தி விடுகிறேன். இதுதான் என்னால் இயலும்.
கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்.
Thursday, October 19, 2006
கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்
Posted by ஞானவெட்டியான் at 7:39 AM
Labels: பின்னூட்டங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
51 Comments:
அய்யா அதெல்லாம் ஒரு ஜாலிக்கு எழுதுவது. மனசில வச்சுக்காதீங்க. நீங்க எப்பொழுதும் போலவே இருங்க.
பெரியவங்க நீங்க இதெல்லாம் பக்குவமா எடுத்துப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான்.
ஐயா,
சினமுறாத தங்கள் பதிவு பெருந்தன்மை, அனுபவ முதிர்ச்சி ஆகியவற்றை காட்டுகிறது. இரண்டி தினங்களுக்கு முன் நடந்த நிகழ்வால் நானும் சற்று சலிப்படைந்தேன். பின் வந்த பதிவு(தங்கள் விளக்கமும், காரணமும்) என்னை சாந்தப்படுத்தியது.
தொடர்ந்து எழுதுங்கள்.
ஞானவெட்டியான், நான் அங்கிட்ட மறுமொழியை இங்கும் இடுகிறேன்.
உங்கள் பதிவுகள் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பெட்டகம். தொடருங்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.
ஐயா, தொல்லை இல்லை.
கவியோகிகவியோகிஇதற்கெல்லாம் எழுதமாட்டேன் என்று விட்டுவிடலாமா? பின்னர் உங்கள் பெயருக்கு இழுக்கு! ஒன்று- ஞானம் வந்தவர், மொழியாற்றுகையில், அது அறிவாளிகளுக்குப் போகிறதா, மடையர் காதில் விழுகிறதா என்றா பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மற்றொன்று- கோடாலி மீசை கண்ணாடி ஞானவெட்டியான்! - நன்றாக வர்ணித்திருக்கிறார் என்று எண்ணிவிட்டுபோங்களேன்! கோடாலிமீசை மடங்கலாமோ? நிமிர்ந்து நிற்க வேண்டாமோ? - பாரதி மீசைப்ப்போல்! :)
அன்பு இலவசக் கொத்தார்,
//அய்யா அதெல்லாம் ஒரு ஜாலிக்கு எழுதுவது. மனசில வச்சுக்காதீங்க. நீங்க எப்பொழுதும் போலவே இருங்க.
பெரியவங்க நீங்க இதெல்லாம் பக்குவமா எடுத்துப்பீங்கன்னு ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். //
மனதில் வைத்துக்கொண்டிருந்தால் என்ன ஆவது? எனக்கல்லவா இரத்தக் கொதிப்பு ஏறும்.
ஒரு தன்னிலை விளக்கம்தான்.
கணினியியல் தெரியாது. ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது.
நான் எப்பொழுதும்போலவே இருப்பேன். நான் உண்டு; என் வேலை உண்டு. சம்பந்தமின்றி எதிலும் மூக்கை நுழைக்க விருப்பமில்லை.
நன்றி.
அன்பு நாமக்கல் சிபி,
//சினமுறாத தங்கள் பதிவு பெருந்தன்மை, அனுபவ முதிர்ச்சி ஆகியவற்றை காட்டுகிறது. //
விதை வித்தைத்து நீர் ஊற்றுகிறேன். முளைத்தால் பயிர்; இல்லையெனில் பதர். எந்தச் சூழ்நிலையிலும் சினம் வராமல் பாதுகாப்பதே தவம்.
என் படைப்புக்கள் தொடரும் (மற்றவர்க்குத் தொல்லையின்றி)
நன்றி.
அன்பு மணியன்,
//உங்கள் பதிவுகள் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பெட்டகம். தொடருங்கள்.//
தொடர்கிறேன்.
//ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.//
நஞ்சாக மாறாமல் பார்த்துக்கொள்கிறேன்.
நன்றி.
அன்பு குமரன்,
மிக்க நன்றி.
அன்பு சந்திரா,
//கவியோகிகவியோகிஇதற்கெல்லாம் எழுதமாட்டேன் என்று விட்டுவிடலாமா? பின்னர் உங்கள் பெயருக்கு இழுக்கு!//
அப்படியெல்லாம் நினைக்கவில்லை. தொடர்கிறேன்.
//ஒன்று- ஞானம் வந்தவர், மொழியாற்றுகையில், அது அறிவாளிகளுக்குப் போகிறதா, மடையர் காதில் விழுகிறதா என்றா பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? //
அதைத்தானே இத்தனை நாள் செய்து கொண்டிருக்கிறேன்.
//மற்றொன்று- கோடாலி மீசை கண்ணாடி ஞானவெட்டியான்! - நன்றாக வர்ணித்திருக்கிறார் என்று எண்ணிவிட்டுபோங்களேன்!//
அருமையான பெயர். அழைக்க விருப்பமிருப்பின் அழைக்கட்டுமே. யார் வேண்டாமென்றது.
//கோடாலிமீசை மடங்கலாமோ? நிமிர்ந்து நிற்க வேண்டாமோ? - பாரதி மீசைப்ப்போல்! :)//
நிச்சயம் எப்பொழுதும் மடங்காது. அது உறுதி.
நன்றி.
ஐயா,
சும்மா ஒரு ஜாலிக்கு எழுதினேன், தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இந்த பதிவு உங்களை பாதித்திருந்தால் சொல்லுங்கள் பதிவை எடுத்துவிடுகிறேன்.
ஞானவெட்டியான் அவர்களே,
தங்கள் பதிவுகளை இட்டவுடனே படிப்பவர்களிலே ஒருவன் அல்லன் நான். ஆனால், தமிழ்மணம் முகப்பிலே தங்கள் பதிவுகள் இடத்தினை எடுத்துக்கொள்கின்றதென நீங்கள் பதிவுகளைக் குறைக்கத்தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகின்ரது. தமிழ்மணம் எல்லோரும் வாசிக்க இணைவதற்கான முகப்புமட்டுமே. தமிழ்வாசகர்களுக்கு அது செய்து தரும் வசதி மிகப்பெரிது. ஆனால், அதன் காரணமாக உங்கள் வசதிக்கேற்ப, பதிவிடும் சுதந்திரத்தினை நீங்கள் மட்டுப்படுத்திக்கொள்ளத்தேவையில்லை. துக்கடா துணுக்கு பதிவுகள் எத்தனையோ முகப்பினை அடைத்துக்கொண்டிருக்கின்றன. அவை பற்றி அவற்றினைப் பிடிக்காதவர்கள் குற்றம் சுமத்தமுடியுமா? பிடிப்பதை எடுத்துக்கொள்வதும் பிடிக்காததை விடுத்துச் செல்வதும் அவரவர் கட்டுப்பாட்டுக்குள்ளேதானே இருக்கின்றது. இதற்காக, நீங்கள் எதற்காக பதிவுகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும்?
ஐயா,
இந்த விஷயத்தைப் பெரிது படுத்தாதீர்கள். தொடர்ந்து உங்கள் பதிவுகளைத் தாருங்கள்.
இலவசக்கொத்தனார்..
நீங்கபாட்டுக்கு வூடு கட்டிட்டேயிருங்க.
இட்லிவடையின் நையாண்டி ரசிக்க மட்டுமே.
ஓய்வுபெற்றபின்னும் இளமை ததும்ப இண்டர்நெட்டில் சுற்றும் வாலிபர்கள் நீங்கள்.
ஞானவெட்டியான் அவர்களே,
வழக்கம்போல் தொடருங்கள்.
அன்பு இட்லி வடை நண்பரே!,
//சும்மா ஒரு ஜாலிக்கு எழுதினேன், தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இந்த பதிவு உங்களை பாதித்திருந்தால் சொல்லுங்கள் பதிவை எடுத்துவிடுகிறேன்.//
பதிவை எடுக்கவேண்டிய அவசியமில்லை. இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பினும், என் கோட்பாடு என்ன என நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டுமே என்றுதான் விளக்கமீந்தேன்.
இதனால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
அன்பு இராகவா,
என் கோட்பாடு என்ன என நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டுமே என்றுதான் விளக்கமீந்தேன்.
நிச்சயம் என் ஞானவேள்வி தொடரும்; இதில் ஐயமேதுமில்லை.
நன்றி.
அன்பு சிறில் அலெக்ஸ்,
//நீங்கபாட்டுக்கு வூடு கட்டிட்டேயிருங்க.
இட்லிவடையின் நையாண்டி ரசிக்க மட்டுமே.
ஓய்வுபெற்றபின்னும் இளமை ததும்ப இண்டர்நெட்டில் சுற்றும் வாலிபர்கள் நீங்கள்.//
நண்பர் இட்லிவடயின் நகைச்சுவையை நானும் இரசித்தேன். ஆயினும், என் நிலைப்பாட்டைச் சிறிது விளக்கினேன்.
ஓய்வுபெற்றபின் சிறிது இறைப்பணி செய்கிறேன்.
தங்களின் மின்னஞ்சல் கண்டதும் உண்மையிலேயே இளமை திரும்புகிறது.
நன்றி.
அன்பு முத்து,
நன்றி.
அன்பு பெயரிலி,
மிக்க நன்றி.
என் பணி தொடரும்.
ஐயா,
ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி.
அன்பு நண்பரே, இட்லிவடை,
எல்லாவற்றையும் மறந்துவிடுவோமே!
நல்ல நண்பர்கள் நாம்.
சரிதானா?
பெரியஞானி ஐயா,
குப்பைகள்,சாதிசண்டைகள்,சமயசண்டைகள் இவை மலிந்து கிடக்கும் தமிழ்மணத்தில் கருத்து செறிவு நிறைந்தும் மனிதனை நல்வழிபடுத்தும் வழிகளை காட்டும் பதிவுகள் மிக மிக அரிது.
அப்படி ஒரு சேவையை தமிழுக்கு அளித்து வரும் தாங்கள் தொடர்ந்து அச்சேவையை செய்து வாருங்கள்
"அறியாத பிள்ளைகளும் தெரியாமல்
உன்னை சிறு பேரழைத்தனவும் சீறியருளாதே"
என்ற கோதையின் அமுத வரிகள் தங்களுக்கு தெரியாததல்ல.
அன்பு செல்வன்,
மிக்க நன்றி.
அய்யா,
உண்மையில் சொல்லப்போனால் நாம இட்லிவடையாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அவரது பதிவால் உங்களைப் பற்றி தெரியாத பலர் உங்களுடைய ஞானமுத்துக்களை படித்து பயன்பெறுவார்கள்.
நான் அவரது பதிவிலேயே கருத்து சொல்ல நினைத்தேன், ஆனால் அவர் நகைச்சுவை என்று சொன்னதால் சிரித்து விட்டு வந்து விட்டேன், மேலும் இட்லி வடையாரின் நகைச்சுவை பதிவுகள் தனித்தன்மை பெற்றவை. சென்ற ஆண்டின் டாப் 10-2 போன்றவை பலரின் பாராட்டுகளை பெற்றது.
தமிழ் மணத்தில் உங்களுக்கு இத்தனை வாசகர்கள் இருப்பது இட்லி வடையாரால் தான் தெரிய வந்தது.
எத்தனை சோதனைகள் வந்தாலும் கலங்காமல் உங்களுடைய சேவையை செய்யுங்க.
அன்புடன் வேண்டுவது,
பரஞ்சோதி
அன்பு பரஞ்சோதி,
நன்றி.
ஐய்யா,
நான் பக்திமானும் அல்ல..பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஆர்வமோ பரிச்சயமோ கொண்டவனும் அல்ல....உங்கள் பதிவுகளை நான் படிப்பதும் இல்லை..ஆனால்
நிறைய பேர் படிக்கிறார்கள்.இணையம் யாருடைய வீட்டு முற்றமு்ம் அல்ல.
சமுதாயத்திற்கு உங்கள் பங்களிப்பை தாராளமாக தாருங்கள்.நீங்கள ஒரு நாளைக்கு நாலு பதிவுக்கூட போடுங்கள். என் ஆதரவும் வாழ்த்துக்களும்.
அன்பு முத்து(தமிழினி),
//சமுதாயத்திற்கு உங்கள் பங்களிப்பை தாராளமாக தாருங்கள்.நீங்கள ஒரு நாளைக்கு நாலு பதிவுக்கூட போடுங்கள். என் ஆதரவும் வாழ்த்துக்களும்.//
மிக்க நன்றி, நண்பரே.
ஞானவெட்டியாரே,
"தங்களின் மின்னஞ்சல் கண்டதும் உண்மையிலேயே இளமை திரும்புகிறது."// - பொய்யெல்லாம் சொல்லாதீங்க; இளமை போனாதான திரும்பறது!! - உங்கள மாதிரி ஆட்களுக்கு!!!
சோம்பல்பட்டு இருக்கும்போது தமிழ்மண முகப்பில் உங்கள் கோடாலி மீசையைப் பார்த்தால் "ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய வயதில் இவ்வளவு ஆர்வத்துடன், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக எவ்வளவோ பயனுள்ள விஷயங்களை முனைந்து சிரமப்பட்டு எழுதிக்கொண்டு இருக்கிறாரே... நாம் என்னத்தை வெட்டி முறித்தோம் என்று "நேரமில்லை" என்ற புலம்பலை சாக்காக வைத்து எழுதாமல் இருக்கிறோம்?" என்று என்னை நானே கேள்வி கேட்டுக் கொள்வேன். ஜோஸப் ஸார் படத்தைப் பார்க்கும்போதும்தான்.
உங்கள் படங்களும், பதிவுகளும் தமிழ்மண முகப்பில் நிறைந்திருப்பது நல்ல விஷயமே! இதில் எந்த வரையறையும் நீங்கள் விதித்துக்கொள்ளாது வழக்கம்போலத் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அய்யா,
எல்லா பதிவாளர்களின் பதிவுகளும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை.
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே.
தொடந்து எழுதுங்கள்.
ஐயா,
என்ன வெகுநாட்களாக உங்கள் இடுகைகளை காணமுடிவதில்லை ?
ஏதேனும் மனவருத்தமா?
ஆமாம் ஐயா. நானும் மணியன் கேட்டதையே கேட்கவேண்டும் என்றிருந்தேன். ஏதேனும் மனவருத்தமா? இல்லை உடல் நலக் குறைவா?
அன்பு தருமியாரே!,
//பொய்யெல்லாம் சொல்லாதீங்க; இளமை போனாதான திரும்பறது!! - உங்கள மாதிரி ஆட்களுக்கு!!!//
பொய் சொல்லவில்லை. சிறிது தொய்வு விழும்போது முதுமை மேலெழுகிறது; பின்னர் இளமை துளிர்க்கிறது.
மிக்க நன்றி.
அன்பு சுந்தர்,
//இதில் எந்த வரையறையும் நீங்கள் விதித்துக்கொள்ளாது வழக்கம்போலத் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.//
கட்டாயம் எழுதுவேன் சுந்தர். நன்றி.
அன்பு பச்சோந்தி,
//எல்லா பதிவாளர்களின் பதிவுகளும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை.//
ஆமாம். கட்டாயம் எழுதத்தான் போகிறேன்.
மிக்க நன்றி.
அன்பு மணியன், குமரன்,
// ஐயா, என்ன வெகுநாட்களாக உங்கள் இடுகைகளை காணமுடிவதில்லை ?
ஏதேனும் மனவருத்தமா?//
8 நாட்களாகத்தானே இடுகைகள் வரவில்லை.
என் இல்லாளுக்கு உடல்நலப் பின்னடைவு. கோவை PSG மருத்துவமனையில் உட்பிரிவு நோயாளியாக வைத்து சிகிச்சை கொடுக்கவேண்டியிருந்தது. கோவையிலிருந்ததால் இடுகைகள் இடமுடியவில்லை.
கோவையில் இருந்தபொழுது மருத்துவமனைக்கு வந்து உதவிகள் செய்த என் இளவல்கள் தமிழ்பயணி சிவாவுக்கும், அனுவுக்கும் என் நன்றிகள்.
எனக்கு மன வருத்தம் ஒன்றுமில்லை. இயலாமைதான்.
தங்கள் துணைவியாரின் உடல்நிலை பரவாயில்லையா பெரியஞானி ஐயா?
விரைவில் அவர் உடல்நிலை குணம் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஐயா என்ன ஆச்சு?????
அம்மா எப்படி இருக்கிறார்கள்
அன்பு செல்வன்,
70 விழுக்காடு முன்னேறியுள்ளது. இன்னும் சிகிச்சை தொடரவேண்டும். 8.3.2006 திரும்பவும் கோவை செல்லவேண்டும்.
தங்களின் அன்புள்ளத்துக்கு நன்றி.
அன்பு மகளே, மது,
நலமா? மாப்பிள்ளை இராஜா, பெயரக் குழந்தைகள் நலமா?
அம்மாவுக்கு CANDIDIASIS. 70 விழுக்காடு முன்னேறியுள்ளது. இன்னும் சிகிச்சை தொடரவேண்டும்.
நன்றி.
அன்பின் ஐயா,
தாங்களும் அம்மாவும் பூரண சுகம் அடைந்து முன்போல் மகிழ்ச்சியுடன் வலம் வரவேண்டுமென்று எம்பெருமான் முருகப் பெருமானை வணங்குகிறேன்.
அன்புடன்,
மூர்த்தி.
ஐயா,
விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
அன்புடன்
இட்லிவடை
அன்பு மூர்த்தி,
தங்களின் வேண்டுதலுக்கு நன்றி.
அன்பு இட்லிவடை,
தங்களின் கரிசனத்துக்கு(அக்கரைக்கு) நன்றி.
அன்பின் அய்யா யாரும் அறிய செய்வது உதவியன்று.
// கோவியில் இருந்தபொழுது மருத்துவமனைக்கு வந்து உதவிகள் செய்த என் இளவல்கள் தமிழ்பயணி சிவாவுக்கும், அனுவுக்கும் என் நன்றிகள். //
தங்களைப் போன்றவர்களுக்கு உதவ வாய்ப்பு கிட்டியதே என் போன்ற இளைய தலைமுறைக்கு கிட்டிய வரம் ஆகும். என்றும் உதவ காத்துள்ளேன்.
அன்பு தமிழ்பயணி சிவா,
காலத்தினால் செய்த உதவி ஞாலத்தினும் மாணப் பெரிதல்லவா?
மிக்க நன்றி.
அய்யா,
அம்மாவின் உடல்நலம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
வேண்டுதலுடன்
பரஞ்சோதி
அன்பு பரஞ்சோதி,
தங்களின் வேண்டுதலுக்கு நன்றி.
ஐயா,
தங்கள் துணைவியாருக்கு தற்போது உடல்நிலை எப்படி உள்ளது?
விரைவில் உடல்நலம் பெறை எல்லம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்பு சிபி,
தங்களின் வேண்டுதலுக்கு நன்றி.
Post a Comment