Saturday, February 17, 2007

சோதனை

சோதனை ஓட்டம்

Thursday, February 15, 2007

அந்த நாலுபேருக்கு நன்றி!

அன்புடையீர்,
மீண்டும் ஞானவெட்டியான் வந்துவிட்டான்; அதுவும் புது BLOGGER அடைப்பலகையுடன்.

அது எப்படி? எல்லோரும் தடுமாறும்போது, இவன் மட்டும்?
அதுதான் நன்றி கூறப்போகிறேனே!

1. தீபா கோவிந்த்: சும்மா சொல்லக்கூடாது. மிகவும் பொருமையுடன் கூகுள் டாக்கில் டியூஷன் எடுத்து, 75% ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார்கள்.

2.பொன்ஸ்: மாட்டிக்கொண்டபோது ஓடிவந்து உதவி செய்தார்.

3.ஜகத்(ரட்சகன்): Recent comments, Recent Posts widget சேர்க்கமுடியாது புலம்பியபோது வந்து உதவியவர்.

4.ஹான்ஸ்: அவர்தான். Beautiful Beta Blogன் படைப்பாளி. என்னென்னமோ எழுதியிருக்கிறார். இந்த மரமண்டையில் ஏறவில்லை. கொஞ்சம் புரிந்துகொள்ள உதவியது.

இந்த நாலுபேருக்கும் நன்றி! நன்றி!!

என்ன வரினும் வருக! என்று முட்டி மோதி காலநேரம் பாராது செய்து முடித்ததில் எனக்கும் மன திருப்தி.

எல்லோரும் வந்து பார்த்து எப்படி இருக்கிறதென கூறுங்களேன். அப்பொழுதுதானே மற்றவற்றையும் மாற்றமுடியும்.

Saturday, February 10, 2007

உதவி தேவை!!!

சில நாட்களுக்குமுன் நம் நண்பர்களில் ஒருவர் புது புளாக்கரின் அடைப்பலகை அகலத்தை விரிவு படுத்துவது குறித்த பதிவு ஒன்றை இட்டிருந்தார். அந்த சுட்டி கிட்டுமா?

Friday, February 09, 2007

ஞானவெட்டியான் வகையாக மாட்டிக்கிட்டான்!!

ஞானவெட்டியான் வகையாக மாட்டிக்கிட்டான்!!

தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ஒரு அறிவிப்பு.

இதனால் சகலபேர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் Blogger என்னை ஒழிப்பதற்கென்றே வேண்டுமென்றே எல்லா பதிவுகளையும் மாற்றிவிட்டது.
சந்திக்கும் இக்கட்டுகள்:

1.மிகவும் அல்லல்பட்டு இப்பொழுதுதான் பொங்கலுக்கு இருந்த கூரைவீட்டை(template) பழுதுபார்த்தேன். அந்த templateஐ Blogger ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறது.

2.ஒரே e-mail idல் 11 பதிவுகள் உள்ளன. அதற்குத் தனித்தனியாக e-mail id பதிந்து மாற்ற ஒரு பதிவில் இருந்துவரும் 92 இடுகைகளையும் பின்னூட்டத்துடன் export செய்வது எப்படி?

எல்லோரும் வந்து உதவிசெய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இல்லை எனில் njaanam@gmail.comக்கு தங்களின் மின்னஞ்சல் முகரி தந்தால் தனியாகத் தொடர்பு கொள்கிறேன்.

அப்பாடா! தொலைந்தான்!! என்றால் உதவி செய்யாமலும் இருக்கலாம்!!! (நகைச்சுவைக்காக மட்டும்) smily போடத் தெரியவில்லை!!

Thursday, February 01, 2007

துக்கச் செய்தி

"செவிக்கினிய செந்தமிழ்ப் பாடல்கள்" வலைப்பூ BLOGGERஆல் கொல்லப்பட்டுவிட்டது.
என்னதான் முயன்றும் காக்க இயலவில்லை. அனைவரும் அஞ்சலி செலுத்துங்கள்.

Wednesday, January 31, 2007

கட்டாய மாற்றம்

ஐயகோ!!
இது என்ன கொடுமை?
நாட்டில்தான் கட்டாய மதமாற்றம் என்றால் BLOGGERம் அதில் இறங்கிவிட்டதே!
நான் என் பாட்டுக்கு இருந்த வலைப்பூவில் என்னுடைய இடுகைகளை இட்டுவந்தது Bloggerக்குப் பிடிக்காமல், அதுவே என் வலைப்பூவை மாற்றித்தருகிறேன் என்று சொல்லி மாற்றிவிட்டது. அதையும் ஒழுங்காகச் செய்யாமல் நன்றாய் தெரிந்துகொண்டிருந்த தமிழ் எழுத்துக்களை திஸ்கி மாதிரி் ஆக்கிவிட்டது.

ஐயா, தொழில் வல்லுனர்களே! என்ன செய்தால் என் வலைப்பூவில் யூனிகோடு எழுத்து தெரியும்? செவிக்கினிய பாடல்கள் வலைப்பூவைப் பார்த்து நல்வழிப்படுத்துங்களேன்.

Tuesday, January 30, 2007

திரையிசை கேட்க CINPOD

அன்புடையீர்,

ஏதோ! "PODCASTING" அப்படியெனச் சொல்லுகிறார்களே? அது என்ன? என என்னுள்ளே எழுந்த கேள்விகளுக்காகக் கூகுள் ஆண்டவரை அழைத்தேன். உள்ளே நுழைந்து தேடும்போது கிட்டியவைகளை அசைபோட்டபோது, "நாமும் ஏன் ஒன்று உருவாக்கக் கூடாது?" என்னும் வினா என்னுள்ளே எழுந்தது. அதன் விளைவே இந்த "CINPOD".

வழக்கிழந்த காவியங்களை உயிர்ப்பிக்கும் என் கொள்கைக்கு இதைப் பயன்படுத்தத் தீர்மானித்தேன். 1940 முதல் 1980 வரை முத்துமுத்தான திரையிசைப் பாடல்கள் வந்துள்ளன. எழுதியவர்களுள் என் உள்ளங்கவர்ந்தவர்கள் இருவர்; ஒருவர் பட்டுக்கோட்டையார்; இன்னுமொருவர் கவிஞர் கண்ணதாசன். இவ்விருவருமன்றி, உடுமலை நாராயணகவி, மருதகாசி ஆகியோரின் காலத்தால் அழியா காவியங்களுக்கு இன்னிசை அமைத்தவர்கள், G.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள், R.சுதர்சனம், A.M.ராஜா, T.R.பாப்பா, T.G.லிங்கப்பா, இன்னும் பலர்.

இவ்வினிய பாடல்களை, "செவிக்கினிய பாடல்கள்" என்னும் வலைப்பூவில் பிட்டுப் பிட்டு இட்டுவந்தாலும், அவைகளை ஒருங்கிணைத்து இங்கே தாரலாம் என்பது என் அவா. எப்பொழுது வேண்டுமானாலும் ஒட்டுமொத்தமாகக் கேட்டு மகிழுங்கள்.

Saturday, January 13, 2007

பொங்கலுக்குத் தயாராகிறேன்

ஆண்டுக்கொருமுறை வரும் பொங்கல் ஏன் வருகிறது?
வீட்டில் உள்ள பழையனவற்றைக் கழித்தலுக்கும், புதியனவற்றை சேர்ப்பதற்கும்தான்!

"குடிசை வீட்டில் உள்ள கூரை ஒழுகுகிறது; சூரியன் தாராளமாக உள்ளே வருகிறான் என நானும் சொல்லிக்கிட்டே இருக்கிறேனே! காதில் விழவில்லையா?" என்று குறையிடும் மனைவி.

"கவலைப்படாதே! என் கோமளமே! பொங்கல் வரட்டும்; செய்து விடுவோம்" எனும் கணவன். எப்படிச் செய்வது?

வெள்ளாமை விளைஞ்சு விலைக்குப் போட்டு வரும் பணத்தை என்ன செய்வது?
பயிர் விளைந்து பணம் வந்துவிட்டது; காரணமாயிருக்கும் சூரியனுக்குப் பொங்கல். அதைச் சாக்காக வைத்து குடிசையை சீர்திருத்தியாகிவிட்டது. உடைந்த மண்திண்ணைக்கு ஒட்டு; சாணம் மஞ்சள் கரைத்து மெழுகி சீர்பார்த்தாகிவிட்டது. வெள்ளை அடித்துவிட்டாகிவிட்டது. பெண்னுக்கு வரன் பார்த்தாகிவிட்டது; பொங்கல் முடிந்த கையோடு திருமணம் நிச்சயித்தாயிற்று.

மனைவியின் மஞ்சள் முகத்தில் ஒளிவீசுகிறது; அவ்வளவு பூரிப்பு.
இவ்வளவு காரியம் பார்த்தாகிவிட்டது.

அதனால், நாளைக்கு நண்பர்கள், சுற்றத்தார் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்வதை ஒத்தி வைத்துவிட்டு ஓய்வெடுப்பது நல்லதல்லவா?

Friday, January 12, 2007

சற்றே உதவுவீர்களா?

அன்புடையீர்,
Sandboxஅடைப்பலகையிம் தலைப்பிலும், comments2லும் கீழ்க்கண்டவாறு தெரிகிறது. அவை ஒழுங்காகத் தெரிய அடைப்பலகையில் என்ன மாற்றம் செய்யவேண்டும்.
சற்றே உதவுவீர்களா?

Monday, January 01, 2007

சாதி எப்படி வந்தது?

சாதி எப்படி வந்தது?
அளவற்ற் செல்வமிருந்தால் அதை ஏழைக்கு கொடுப்பதா?
யோகியின் நிலை என்ன?

பட்டினத்தார் சொல்வதென்ன?


கடவுள் யார்?

கடவுள் யார்?
அவனை எப்படி உணர்வது?
சிற்றின்பம் என்றால் என்ன?
பேரின்பம் என்றால் என்ன?
பட்டினத்தாரின் பதில் என்ன?


Tuesday, December 26, 2006

கிறிஸ்துமஸ் பரிசு

எனக்குக் கிட்டியது போலக் கிறிஸ்துமஸ் பரிசு யாருக்கும் கிட்டியிருக்காது. காலையில் கணினியைத் திறந்ததும் ஒரே அதிர்ச்சி. 163 பரிசுகள் Antivermisஉடன் சேர்ந்து யாரோ ஒரு புண்ணியவான் அனுப்பியிருந்தார். அவருக்கு என்மேல்தான் எத்தனை ஆசை பாருங்களேன். ஒன்றா? இரண்டா? என்ன செய்வது?

தலையெழுத்தே! என Reformat செய்து கணினியை இயங்கச் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்த நல்லிதயத்துக்கு நன்றி பல.

பி.கு: ஐயா, தொழில்நுட்பம் தெரியாத என் போன்ற அறிவிலிகளுக்கு அனுப்பாதீர்களேன்.

Sunday, December 24, 2006

தியாகத் திருநாள் வாழ்த்து

அன்புடையீர்,
தியாகத் திருநாள் கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எங்களின் இனிய வாழ்த்துகள்.

Thursday, December 14, 2006

கோவையில் ஒரு நாள்

"உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

"To realise the value of 1 year, ask a student who failed in his exam
To realise the value of 1 month, ask a mother who has given to a premature baby
To realise the value of 1 week, ask an editor of a weekly
To realise the value of 1 day, ask a daily wage labourer
To realise the value of 1 minute, ask a person who has missed the train
To realise the value of 1 second, ask a person who has survived an accident
To realise the value of 1 milli second, ask the person who has won a silver medal in Olympics.

மருத்துவர்களுக்கு எப்படி காலம் விலையில்லாததோ, அப்படியே நோயாளிகளுக்கும் என்பதை மறந்துவிடுகின்றனர். நேற்று முழுவதும் கோவை PSG மருத்துவ மனையில் காத்துக் கிடந்து அலுத்து விட்டது.

அத்தருணத்தேதான் உதவி கிட்டியது. வலையுலகால் கிட்டிய நண்பர் திரு.செல்லா, தானே முன்வந்து, தன் பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, கோவையிலேயே பெரிய மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர்தான் Dr.MOHAN RAM. அங்கும் சனத் திரள். இருப்பினும், செல்லா வந்திருக்கிறார் என்றவுடன், மருத்துவர் உள்ளே அழைத்து, எங்களின்மேல் தனி கவனம் செலுத்தினார். மருத்துவம் பார்த்து, இரவு 8மணியளவில் திண்டுக்கல் அனுப்பி வைத்தார்.

அங்கே அவருடன், எனக்காகக் காத்திருந்த, ஆன்மிகத் தேடலில் இரு முத்துக்கள். அவர்கள்தான், திரு.கதிரும், இரவியும். எங்களைப் பசியாற்றிவிட்டு, 30 மணித்தியாலங்கள் உரையாடியபொழுதுதான் கண்டேன், அவர்களின் வீரியத்தை. இளம் வயது. எப்படியாகிலும் மெய்யைக்(உடலுக்குள்) காணவேண்டும் என்னும் உறுதியான மனப்பக்குவம்.

இது வலையுலகால் ஏற்பட்ட நட்பாகிலும், காலத்தே செய்த உதவி. அது ஞாலத்தினும் பெரிதல்லவா?
அவர்களுக்கு என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் நன்றி ஒன்றே.

Friday, December 08, 2006

கந்தர் கலிவெண்பா-12

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துலவா வின்ப - மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றுந் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப்
பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்துண்ணின்
றொருமலத்தார்க் கின்ப முதவிப் - பெருகியெழு


வரவு = பிறப்பு
கடந்து = கடந்த, அப்பாற்பட்ட
உலவா = நீங்காத, வற்றாத
மருவுவித்து = சேர்ப்பித்து
கன்மமலத்தார் = ஆணவத்தோடு வினைப்பாசம் மாத்திரம் உடையவர்கள்
மின்னிடத்துப் பூத்த = மின் போன்ற உமை
இடத்து = இடப்புறத்தே
பூத்த = தோன்றிய
பொருப்பு = வெற்பு = மலை
மூத்த = பழமையாக உள்ள
மூத்த மலம் = ஆணவம்
கரும மலம் = வினை
கண் = ஞானம்
உண்ணின்று = புறத்தே தோன்றாமல் உயிரின் அறிவிலே விளங்கி
ஒரு மலத்தார் = ஆணவ மலத்தை மட்டும் உடையோர்
இன்பம் = பேரின்பம்

இறத்தல், பிறத்தல், நினைத்தல், மறத்தல், பகல், இரவு என்ற வேறுபாடுகளைக் கடந்ததாயுள்ள அழியாத பேரின்பத்தைப் பொருந்தச் செய்பவனே!

அறியாமைக்கும், வினைக்கும் காரணமான பாசம் உடையவர்களுக்குத் தாமரை போன்ற மூன்று கண்களும்(சூரிய, சந்திர, அக்கினி கலகளும்), நீண்ட சடையும் திருக்கையில் தரித்த வலிமை மிக்க தண்டும் மானும் உடையவனாய் இடப்புறத்தே உள்ள மின்னலோடு வெள்ளிமலைமேல் பவளமலை தங்கினாற்போல, பெரிய வெள்ளைக் காளைமேல், இடப்புறத்தே அம்மை உமையோடு சிவந்த தெய்வத் திருமேனியோடு எழுந்தருளி, கரும பாசக் கட்டை ஒழித்து ஞானத்தைக் கொடுத்து அருள்பவனே!

அறியாமைப் பாசம் உடையவர்களுக்கு அவர்கள் உள்ளத்திலே தோன்றி நின்று இன்பத்தைக் கொடுத்து, உடல் எடாத நிலை, உடல்நிலை, உடல் நீங்கிய நிலை ஆகிய மூன்று நிலைகளையும் கடக்கச் செய்து முத்தி பெற்றவர்களோடு சேர்த்து உயர்ந்த மேலான முத்தியை அடையச் செய்பவனே!

Thursday, December 07, 2006

கந்தர் கலிவெண்பா-11

கந்தர் கலிவெண்பா
**********************


ஊழ்வி னையைப்போக்கி யுடலறுபத் தெட்டுநிலம்

ஏழும்அத்து வாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவ மான படலங் கிழித்தறிவிற்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

அடிஞானத் தாற்பொருளு மான்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்தத் தெள்ளமுத மாகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்


ஊழ்வினை = முன்வினை
உடல் 68 = வெளியுடம்பில் உள்ள கருவிகள் 60, நுண்ணுடம்பிஉல் உள்ள கருவிகள் 8 ஆக 68.
நிலம் ஏழு = ஆறாதரமும், ஆகாயமும் ( சூக்கும ஆதரம் சேர்த்து ஏழாதாரம் என்போரும் உளர்)
ஆணவம் = அறியாமை விளவிக்கும் மலம்
படலம் = மறைக்கும் திரை, மறைப்பு நோய்
காணரிய = காணமுடியாத
மெய்ஞானக்கண் = பதி ஞான ஒளி
அடிஞானம் = இறையின் திருவடிகளை அறியும் அறிவால்
பொருள் = கடவுள்
ஆன்மா = உயிர்
கடியார் = காவல் பொருந்திய
முடியாது = அழியாது
தேக்கு = நிறைந்த
போக்கு = இறப்பு

உயிர்களின் வெளியுடம்பில் உள்ள கருவிகள் அறுபதையும், உள்ளுடம்பில் உள்ள கருவிகள் எட்டையும், மூலம் - மூலாதாரம், கொப்பூழ் -சுவாதிட்டானம், மேல்வயிறு - மணிபூரகம், நெஞ்சம் - அநாகதம், மிடறு - விசுத்தம்(விசுத்தி), புருவநடு - ஆக்ஞேயம், ஆகிய ஆறு ஆதாரங்களையும், அதற்குமேல் உள்ள சூனிய ஆகாயம் ஒன்றையும், மந்திர முதலிய ஆறு வழிகளையும் ஒழியும்படி செய்பவனே!

அறியாமைப் பாசமாகிய திரையை நீக்கி, உயிரின் அறிவால் காணமுடியாத கடவுளை அறியக்கூடிய ஞானக் கண்ணைக் கொடுத்து, இறைவனின் திருவடியையே (கண்களை) பற்றிக் கிடப்பதால் அறியக்கூடிய மெய்ப் பொருளையும், உயிர்த் தன்மையையும் அறிவித்து, தனது காவல் அமைந்த உலகு முழுவதும் காண்பித்து, எல்லை இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேரின்பமான சுத்தமான அமிர்தமாய் உள்ள தமது தன்மையையுங் காட்டி, இறத்தல்.....

Wednesday, December 06, 2006

கந்தர் கலிவெண்பா-10

சத்தி நிபாதம் தருதற் கிருவினையும்
ஒத்துவருங் கால முளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவிற் பன்னாள்
அலமருதல் கண்ணுற் றருளி - யுலவா
தறிவுக் கறிவாகி யவ்வறிவுக் கெட்டா
நெறியிற் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக்
கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென் றோர்திருப் பேர்கொண்டு - திருநோக்கால்

சத்தி = அருள்
நிபாதம் = வீழ்ச்சி
இருவினை ஒத்தல் = பிறவிக்கு ஏதுவான நல்வினை, தீவினையில் ஒத்த வெறுப்பு
மலபரிபாகம் = மலம் நீங்கும் தருணம்
அலமருதல் = கவலையோடு அலைதல்
உலவாது = ஓயாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
அவ்வறிவு = உயிரறிவு
பிறியா = நீங்கா
காசினிக்கே = உலகில்
குருபரன் = மேலான குரு
திருநோக்கு = அருள் பார்வை

திருவருள் விரைவாகப் பதிவதற்குரிய மிக மெது, மெது, தீவிரம், தீவிரமிகுதி எனும் 4 வகைப் பக்குவங்கள் ஏற்படுவதற்கு, நல்வினைப் பயன், தீவினைப் பயன் என்ற இரண்டிலும் ஒத்த வெறுப்பு வருகின்ற காலம் தோன்றி, பாசம் நழுவும் பருவத்தில், தவம் செய்த உயிர்கள் பல நாள் திருவருளைப் பெறுதற்கு வருந்துதலைப் பார்த்து, எப்போதும் அவ்வுயிர்களின் அறிவை விளக்கும் பேரறிவானனே! உயிர்களின் அறிவுக்கெட்டாது, முறையாக எவ்விடத்தும் பரந்து நிறைந்து இருப்பவனே! அந்த மேலான நிலை நின்று, பிரிந்து அருட்திரு மேனி கொண்டு இவ்வுலகில் தோன்றிக் குருபரன் என்னும் பெயரைத் தரித்துக் கொண்டு, திருவருட் பார்வையால், முன் செய்த வினைகளைத் தொலைப்பவனே!

Friday, December 01, 2006

கந்தர் கலிவெண்பா - 9

சொர்க்காதி போகமெலாந் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணஞ் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னூற் பரசமயந் தோறுமது வதுவே
நன்னூலெனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல்

விரதமுத லாயபல மெய்த்தவத்தி னுண்மைச்
சரியைகிரி யாயோகஞ் சார்வித் - தருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்
தாலோகந் தன்னை யகற்றுவித்து - நால்வகையாம்

சொர்க்காதி = சொர்க்கம் முதலிய
துய்ப்பித்து = அனுபவிக்கச் செய்து
காரணம் = புண்ணியம்
முன்னூல் = முன்னே சொல்லப்பட்ட பழமையான அருள் நூல்
மெய்த்தவம் = உடலுக்குள் (உண்மையாகச்) செய்யும் தவம்
உண்மைச் சரியை = மந்திர நூலில் சொல்லப்பட்ட முறை

பிவிப் பிணி நீங்கி முக்தியெனும் விடுதலையடைய நான்கு வழிகள்:

1.இறைனிடம், ஆண்டானும் அடிமை போலும் பழகி பக்தி செய்தல்(தாத மார்க்கம்).

2.அப்பனும் பிளையும் போலிருந்து பக்தி செய்தல்(சற்புத்ர மார்க்கம்)

3.நண்பன் நண்பனிடம் பக்தி செய்யுதல்(சக மார்க்கம்)

4."நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்)

இவற்றை முறையே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்.

1.முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது சரியை.

2.அதன்பின், அருள் வேறென்றும், தான் வேறென்றும் பகுத்து நோக்காது புறச்செயல் புரிவது கிரியை.

3.இறைவனை அடைய, நல்ல ஒரு குரு காட்டிய நல்வழியில் மனதையடக்கச் செய்யும் பயிர்ச்சி யோகம்.

4.மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம்.

இவற்றால் அடையும் முக்திகள்:

1.இறையுலகமாம் அறிவு உடலில்(சிதாகாயத்தில்) வாழுதல் சாலோகம்.

2.இறைவனின் அருகில் வாழுதல் சாமீபம்.

3.இறை உருப்பெற்று வாழுதல் சாரூபம்.

4.இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல் சாயுச்சியம்.

இவற்றுள், முத்தி முடிவென ஞானத்தையும், ஏனைய மூன்றையும் பத முத்தி எனவும் சான்றோர் கூறுவர்.


ஆலோகம் = தெளிந்த அறிவு
அகற்றுவித்து = விரிவித்து
நால்வகையாம் = அருள் பதியும் முறைகள் நான்கு; அதாவது, மிக மந்தம், மந்தம், தீவிரம், மிகத்தீவிரம்

கொடிய நரகம், தேவ உலகம் ஆகிய இடங்களில் அனுபவிக்கவேண்டிய வேண்டியவைகளை எல்லாம் அனுபவிக்கச் செய்துவிட்டு, பிறவா வழிக்குக் காரணமாகிய நல்லறிவை உயிர்கள் பெற்றவுடன், அவைகள் மதங்களில் கூறப்பட்ட வழிகளில் படிப்படியாகச் செல்லும்பொழுது ஒன்றோடொன்று விவாதம் செய்கின்ற பழைய நூல்களில் கூறிய அந்நிய சமயங்களில் நிற்கும்போது அச்சமயங்களின் சாற்றிறங்களே நல்ல சாற்றிறங்கள் எனத் தோன்றச் செய்து, அம்மத ஒழுக்கங்களில் நிலைபெறச் செய்து, ஆதி நூற்களில் கூறப்பட்டுள்ள விரதமிருத்தல் முதலான பல தவ நெறிகளை உண்மையாகக் கடைப்பிடித்தபின், மெய்ச் சமயமாகிய சைவ சமயத்தில் உள்ள, பணிவிடை நெறி, பூசை நெறி, யோக நெறி ஆகியவைகளில் நிற்கும்படி செய்பவனே! அவற்றின் பயனாகத் திருவருள் பெருகுவதற்கு ஏதுவாகிய பதவிகளாம் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகியவைகளை அடையும்படி செய்து நல்லறிவை விசாலப் படுத்துவோனே!

Saturday, November 25, 2006

நண்பர் மாசிலாவுக்கு

நண்பர்"மாசிலா"வின் பின்னூட்டம்
*****************************************

தங்களின் பெயர் "மாசிலா" என வைத்துள்ளீர்கள்; ஆயினும் தங்களின் மின்னஞ்சலில் அது உள்ளதே!

//வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?//

"வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில்" என்பதை எப்படி ஒத்துக்கொள்வது. கண்ணால் காண்பதெல்லாம் மாயையே! சிவனைக் கண்ணால் பார்க்கவியலுமா? நான் எந்த இடத்திலும் "வந்தேறி......."
எனக் குறிக்கவில்லையே!

"எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால்"

எவனோ ஒருவன் அல்ல. அவன் உண்மையான சித்தன். அவன் பறையர்களைச் சாடவில்லை. உயர்த்தித்தான் எழுதியுள்ளான். அவன் சாதிவேறுபாடு காட்டி எழுதவில்லை. முழுவதையும் படிக்காமல், புரிந்துகொள்ளாது குற்றம் சுமத்தவேண்டாம். நம் உடலில் உள்ள வாயைப் "பறைச்சி" எனக் குறிப்பிடுள்ளான். வாயும் சொல்லும் இல்லையெனில் உடலும் உள்ளமும் படும்பாடு பட்டால்தான் தெரியும்.

"நட்டகல்லைத் தெய்வ மென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

இதுவும் சிவவாக்கியரின் பாடல்தான்.
இப்பாடலில் முதல் இரண்டுவரிகளை மட்டும் இறைமறுப்பாளர்கள் எடுத்துகொண்டு வசதியாக மற்றுமிரு வரிகளைப் புறக்கணித்து விடுவர்.

அதுபோலன்றி முழுவதையும் படித்துப்பின் தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்.

"நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்?"

ஆம் ஐயா. நான் பதிக்கவில்லை. நான் பதிந்ததோ என் பதிவில். என் பதிவில் பதிப்பிக்க என்னைத்தவிற யாருக்கும் உரிமை இல்லை என்பதை யாரும் மறுக்கவியலாது. தமிழ்மணம் ஒரு திரட்டி என்பதை நினைவுகூருங்கள். அது தன்னாலே திரட்டித் தந்துவிட்டது. இதில் என் தவறொன்றுமில்லை.

மதச் சண்டைகளும், தனிமனிதச் சாடல்களும் மலிந்துவிட்ட தமிழ்மணத்தில் எனக்கு உரிமை இல்லை; வேண்டவும் வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளலாம்.

//நீங்கள் துதிபாடும் சைவர்களைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் சுவனப்பிரியனின் (http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html)"சமண பௌத்த மதங்களை அழித்த சைவம்" பதிப்பை படித்துவிட்டு வாருங்கள்.//

ஆமாம். அது ஒன்றுதான் பாக்கி. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்தால் அது தங்களின் அகராதியில் "துதிபாடுதல்" எனப்பொருள் என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மதமும் அடுத்த மதத்தைப் போட்டு மிதித்துத்தான் மேலே வந்துள்ளதென நானும் அறிவேன். இதற்கு அடுத்தவரின் பதிவைப் படிக்கவேண்டுமெனும் கட்டாயம் இல்லை. யார் என்ன எழுதினாலும் திருத்த நான் யார்? அவரவர் கொள்கையை அவரவர் சொல்கிறார்கள். நான் யார் அவர்களை மாற்ற? இல்லை அவர்கள் மாறித்தான் எனக்கு ஆகவேண்டியது என்ன?

ஞானம் எட்டியின் முதல் பகுதியிலேயே என் வேண்டுகோளை இட்டுவிட்டேன். அதையும் கொஞ்சம் படியுங்கள்.

"அன்புடையீர்.

"ஞானமெட்டி" நூல் முழுவதுமே சாதிப் பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

கீழ்சாதிக்காரன் தன் ஆண்டையை நோக்கி, "ஞான விளக்கம்" கொடுப்பதாக உள்ளது.

"மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்"

"எம்மதமும் சம்மதமே"

"நாமத்தை நீக்கித் தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்"

"எப்பொருள் யார்.............மெய்ப்பொருள் காண்பதறிவு."

"மனுவை மனுவாக மதி."

இதுவே எமது கோட்பாடு.
நண்பர்கள் இதனால் மனம் நொந்து புறக்கணித்தால் பல அரிய ஞானக் கருத்துக்களைப் புறக்கணித்து விடுவர்.

ஆகவே, சுட்டும் விரல் நோக்காது, சுட்டும் பொருளை அறிந்து உணர்ந்து பலன் பெற வாருங்கள் என அழைக்கும்,

ஞானவெட்டியான்"

தங்களின் வினாக்களுக்கு விடையிறுக்கவேண்டியிருந்ததால்தான் இவ்விடுகை.

இன்னும் வலைப்பதிவர்களுக்கு ஆட்சேபம் இருப்பின் தெரியப்படுத்துங்கள். "சிவவாக்கியர் பாடல்களையும், ஞானம் எட்டி" ஆகிய இரு பதிவுகளையும் நீக்கிவிடுகிறேன்.

அதன் இழப்பு வரும் இளைய தலைமுறைக்கே! எனக்கல்ல.

எனக்கே காலம் போதவில்லை. என் நேரத்தையும், திறனையும் வீணடிக்க விரும்பாத்தால் முடித்துக்கொள்கிறேன்.

Friday, November 24, 2006

கந்தர் கலிவெண்பா - 8

கந்தர் கலிவெண்பா - 8
****************************


ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனியெண்பான்

ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் - தீர்வரிய

கன்மத்துக் கீடாய்க் கறங்குஞ் சகடமும்போற்

சென்மித் துழலத் திரோதித்து - வெந்நிரய


ஈரிரண்டு தோற்றம் = நான்கு வகைத் தோற்றம்
(அவையாவன: முட்டை, கருப்பை, வேர்வை, வித்து)
எழுபிறப்பு: மரம்,ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர்.

ஆயினும் வள்ளலார் எழுபிறப்பைக் கீழ்க்கண்டவாறு உரைப்பார்:

ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்.

இதில் சூட்சமப் பிறப்பு 7 :
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,
சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.

காரணப் பிறப்பு - மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம்

எண்பான் = எண்பது
ஆரவந்த = பொருந்தச் சேர்ந்த
யோனி = கரு வேறுபாடுகள்
என்பத்து நான்கு நூறாயிரம் = 84 இலட்சம்
அவையாவன:
தாவரம் = 20 இலட்சம்
ஊர்வன == 11 இலட்சம்
நீர்வாழ்வன = 10 இலட்சம்
பறவை = 10 இலட்சம்
விலங்கு = 10 இலட்சம்
மனிதன் = 9 இலட்சம்
தேவன் = 14 இலட்சம்

தீர்வரிய = அனுபவியாது தீர்க்க முடியாத
கறங்கு = காற்றாடி
சகடம் = வண்டிச் சக்கரம்
சென்மித்து = பிறந்து
உழல = திரியும்படி
திரோதித்து = (இறைவனை அறியாதபடி) மறைத்து
வெந்நிரயம் = கொடிய நரகம்

முட்டையில் தோன்றுவது, கருப்பையில் தோன்றுவது, வேர்வையில் தோன்றுவது, வித்து, கிழங்கு ஆகியவைகளில் தோன்றுவது, ஆகிய நான்கு வகைத் தோற்றத்தையும், மேற்கூறிய எழுவகைப் பிறப்புக்களையும், எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களையும் அமைத்து, அவற்றுள், உயிர்கள் அவ்வவற்றின் வினைகளுக்குத் தக்கபடி பிறந்து, காற்றாடியும் வண்டிச் சக்கரமும்போல் சுழன்று அலைந்து திரிந்து - கொடிய நரகம்.......