Tuesday, January 01, 2008

3.உருத்தரித்த நாடியில் ஒடுங்கு

சிவவாக்கியர் - 3
*************************
3.உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாதம் உண்மையே.

கருத்தரித்து உருவாக வெளிவரக் காரணமான நாடியில் ஒடுங்கக் கூடிய உயிர்ப்பு சக்தியான வாயுவைக் , அருள் உடைய சிவபாதமாம் வலக்கண், சக்தி பாதமாம் இடக்கண் ஆகியவற்றின் உதவியால் கருத்தினால் ( ஆணி அறைவதுபோல) இருத்திக் கபாலக் குகைக்குள்ஏற்ற முடிந்தவர் கிழவன் ஆனாலும் குமரன் ஆவான். உடலும்
பொன்போல் ஒளிவீசும்.

0 Comments: