"அ"காரத்தின் பிண்டவிளக்கம்
************************************
உலகுக்கெல்லாம் ஆதிபோல் "அ" விளங்குகிறதெனலாம்.
"அ"காரத்தின் பிண்டவிளக்கம்:
"அ"காரம் 12 பிரிவுகளாம்.
1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபர்நாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)
1.ஊன்றல் - வாமை
2.சுழித்தல் - ஜேஸ்டை
3.விசிரிம்பித்தல் - ரெளத்திரி
4.மடித்து மேலேறல் - காளி
5.அங்கிருந்து கீழ்வரல் - கலவி கரணி
6.மேல்பு¨ட பெயர்தல் - பலவி கரணி
7.கீழ்தாழல் - பலப்பிரமதனி
8.கீழூன்றி நிற்றல் - சர்வபூத தமனி
9.வரிவடிவாதல் - மனோன்மணி
(இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளுமுள)
பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் விளக்கியது.
அரபியில் : ஆலி*ப் என்றால் (பிண்டத்தில்) புருவமத்தி.
மகாமே ஜபறூத்தின் திக்ரு 'அல்லாஹ்'.
ஹக்கீகத்திற்குரிய இத்திக்ருவைச் செய்யும்போது அவர்களுடைய
செவிகளுக்குக்கூடக் கேட்காத அளவிற்கு உச்சரித்தல் வேண்டும்.
"விடுமூச்சில் விசைவிசையா யேத்திறக்கும் செய்ய
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி
விதமென்ன விற்போலே வளைந்து தலை குனிந்து
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து".
ஆக, அலி*ப் என்பது முக்கலையொன்றும் இடமே.
இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.
இது நான் செஞ்ச தப்பு. "அ" வேணுமின்னா முதல்எழுத்தா இருக்கலாம்.
அதுக்குப் போய் அதில் உள்ள பேய்ச்சுரக்காய்ச் சிக்கலை அவிழ்த்தது
தப்பு. கொஞ்சம் புரியவைச்சுட்டு அப்புறமா விளக்குறேன்.
"அ"எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம்.
அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி
சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை. இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.
விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.
மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.
அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.
அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.
கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் -
பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.
கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம்.
அங்கே நடுவிலே ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.
தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி.
சர்வபூதமென்றால் ஐம்பெரும் பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.
வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால் "அ"வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.
ஆக "அ"காரமே சர்வ சக்தி.
அப்பாடா!!!!! ரொம்ப சிரமப்பட்டு எழுதியிருக்கேன். பாத்துக்கங்க.
"விடுமூச்சில் விசைவிசையாய்ஏத்த இறக்கம் செய்ய
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி
(விதமென்ன ) வில்போலே வளைந்து தலை குனிந்து
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து".
(சூரிய, சந்திர, அக்கினி - முச்சுடர்)
ஆக, அலி*ப் என்பது மூன்று சுடர்களும் சந்திக்கும் இடமே. இது முச்சந்தி.
இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.
Thursday, December 27, 2007
"அ"காரத்தின் பிண்டவிளக்கம்
Posted by ஞானவெட்டியான் at 12:58 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment