அட்டமா சித்திகள்
*********************
1.அணிமா - நுண்மை(அணுத்தன்மை)
2.மகிமா - பருமை
3.இலகிமா - மென்மை
4.பிராப்தி - விரும்பியது எய்தல்
5.பிராகாமியம் - நிறைவுண்மை
6.ஈசத்துவம் - ஆட்சியனாதல்
7.வசித்துவம் - கவர்ச்சி
8.கரிமா - விண்டன்மை
1.அணுவிலும் சிறிய உருவெடுத்தல்.
2.மேருவினும் பெரிய உருவெடுத்தல்.
3.சேறு முதலியவற்றில் நடந்தாலும், சிக்கினாலும் காற்றைவிட மென்மையாய் வடிவெடுத்து நிற்றல்.
4.மனத்தில் எழும் ஆசைகள் யவையும் ஆசைப்பட்டவாறே அடைதல்.
5.எண்ணத்தால் ஆயிரம் மகளிரைப் படைத்து அத்துணைபேரிடமும் ஆயிரம் வடிவாக நிறு ஆடல்.
6.பிரமன் முதலியோர்மீது தன் ஆணை செலுத்தி, அவர்களால் பூசிக்கப்படும் நிலை.
7.உலகம் முழுவதையும் தன் வயமாக்கல்.
8.பற்றற்று புலன்களால் நுகர்தல்.
Thursday, December 27, 2007
அட்டமா சித்திகள்
Posted by ஞானவெட்டியான் at 5:37 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
சார் இது போல நாம்முயன்றால் முடியுமா
அட்டமா சித்திபெறமுடியுமா? அது சாத்தியமா? நானும் கூட முத்தமிழ் மன்றத்தில் எழுதியுள்ளேன்.
ஐயா. அட்டமாசித்திகளை இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா? பெயர்களைச் சொல்லி ஒரு வரி விளக்கங்களையே கொடுத்திருக்கிறீர்கள். உதாரணங்களுடன் விளக்கமுடியுமா?
அன்பு என்னார்,
திருவருள் கிருபையிருப்பின் நிச்சயம் கிட்டும். கிட்டினால் நாம் இங்கே இருக்கமாட்டோம். தனிமையில் எங்காவது இருப்போம்.
அன்பு குமரன்,
கீழே உள்ளது தெளிவாகத்தானே உளது.
இருப்பினும் தங்களின் ஐயம் என்ன எனத் தெளிவாகக் கேட்டால் இயலும்வரை விளக்க முயலுகிறேன்.
ஐயா. குறிப்பாக பிராகாமியம் - நிறைவுண்மை என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் அவ்வளவாகப் பிடிபடவில்லை. இறைவனுக்கு மட்டுமே படைத்தல், காத்தல், அழித்தல் என்பவை அடங்கிய ஐந்தொழில்கள் உண்டென்றும் ஜீவன் சிவன் ஆனாலும் அந்த பஞ்ச கிருத்தியங்கள் கிடையாதென்றும் படித்துள்ளேன். அதனால் பிராகாமியம் என்பதற்கான விளக்கம் புரியவில்லை. மனதால் ஆயிரம் பெண்களை சித்தியடைந்தவர் படைக்க முடியுமா? அப்படிப் படைத்தாலும் அத்துணைப் பேரிடமும் நின்று ஆடுவது தகுமா? அது காமத்தில் சேராதா? இங்கு மகளிரைப் படைப்பது மட்டும் கூறப்பட்டிருப்பதால் அந்த சித்தி ஆண்களுக்கு மட்டுமே உரியதா? இல்லை அவையடக்கத்தால் ஆயிரம் ஆண்களை பெண்சித்தர் படைத்து அனுபவிக்கலாம் என்பதைக் கூறாமல் விடப்பட்டிருக்கிறதா?
// இறைவனுக்கு மட்டுமே படைத்தல், காத்தல், அழித்தல் என்பவை அடங்கிய ஐந்தொழில்கள் உண்டென்றும் ஜீவன் சிவன் ஆனாலும் அந்த பஞ்ச கிருத்தியங்கள் கிடையாதென்றும் படித்துள்ளேன். அதனால் பிராகாமியம் என்பதற்கான விளக்கம் புரியவில்லை.//
இறைவன் மூலப் பொருளாயிருக்கும்போது ஒன்று. அதுவே பரிபூரணம்.
பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம். பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு.அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது.இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து பிரிந்துவந்தவை சிருஷ்டிகள். அதுவும் பூரணத்தின் ஒரு சிறு துகளே.
இறை சிருட்டிக்குப்பின்னும், முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும்.
அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த
ஒன்று.. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.
நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.
பிரிந்துவந்த பூரணத் துகள் சீவன். சீவன் பல கடினப் பிரயாசைகளால் சித்தி அடைந்து முத்தி பெற்று சிவனை அடைந்துவிடுகிறது. அப்போது சீவன் இல்லை. சிவம் மட்டுமே. சீவன் பிரகாமியம் செய்வது இல்லை. சிவம்தான் செய்கிறது. இங்கு சிவம் என்பது இறை. உருவிலி. பாலிலி.
//மனதால் ஆயிரம் பெண்களை சித்தியடைந்தவர் படைக்க முடியுமா? அப்படிப் படைத்தாலும் அத்துணைப் பேரிடமும் நின்று ஆடுவது தகுமா? அது காமத்தில் சேராதா? இங்கு மகளிரைப் படைப்பது மட்டும் கூறப்பட்டிருப்பதால் அந்த சித்தி ஆண்களுக்கு மட்டுமே உரியதா?இல்லை அவையடக்கத்தால் ஆயிரம் ஆண்களை பெண்சித்தர் படைத்து அனுபவிக்கலாம் ன்பதைக்கூறாமல் விடப்பட்டிருக்கிறதா?//
கண்ணன் கோபியருடன் நடனமாடுவது, பரமாத்மா சீவாத்மாக்களுடன் உறவாடுதலாம். பிரகாமியம் பெற்ற சீவன்களும் கண்ணன்தானே? அவைகள் ஏன் கண்ணனைப்போல் நடனமாடக்கூடாது?
பரமாத்மாவுக்குப் பால் வேறுபாடில்லை.தாங்களே ஒத்துக்கொண்டுள்ளீர். அப்படி இருக்க பெண்சித்தர்கள் இறையுடன் கலந்தபின் பெண்பால் எப்படி வரும்?
இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது:
ஞானமார்க்கத்தினால் கிட்டும் பலன்களே அட்டாமா சித்திகள். இவைகளை அநுபவிப்பவர்கள் தன் நிலை பிறழ்வர். இவ்வளவு சக்தி இருப்பினும், தன்னலத்திற்குப் பயன்படுத்தாது, பிறர் நலம்பேண ஒரு சிறு பகுதியை வேண்டுமாயின் செலவிடலாம். அவனின் கருத்து எப்பொழுதும் ஈசன்பாலிருத்தல் வேண்டும்.
Post a Comment