Thursday, December 27, 2007

இறைவனின் உருவம் என்ன?

இறைவனின் உருவம் என்ன?
*********************************
உடலுக்குள் இருக்கும் பிரணவம் எனும் போது அது சத்தத்து ஒலியாகின்றது. ஆனால் உள்ளத்து ஈசன் ஒளி எனும் போது அந்தப்பிரணவமே கண்புலன் சார்ந்த ஒளியாகின்றது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் பூதமுதலாகிய தன்மாத்திரைகள் ஐந்தும் ஒடுங்கும் முறையில் ஒன்றனுள் ஒன்றாய் முப்பத்து ஆறு மெய்யுமொடுங்கும்.

"சத்த முதலைந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே."

சிவத்திற்கோ ஆதியில்லை; அந்தமில்லை; உருவமில்லை; நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் மலமற்றவனாய் நிற்கும்; வித்து பிளந்து முளை வெளிவந்து எங்கும் பரந்து விரிந்து எதிலும் கலந்து நிற்கும்; ஆகையினால், சிவம், சத்ததின் உள்ளே சதாசிவமாயும், பிரணவமாகிய ஒளியின் உள்ளே ஈசனாகிய ஒளியாகவும், ஒளிக்கு ஆதாரமாயுள்ள இருளுக்குள் இருளாகவும், பாலினுள் நெய்யாகவும், வித்துக்குள் மரமாகவும், எல்லா அணுவுக்குள் அணுவாகவும் உள்ளான்.

ஆக, சிவமோ, பிரணவமோ, இறைவனோ, எல்லாம் அறிவாகிய உணர்வைப் போல் உருவற்றவன்; எங்கும் எதிலும் நிறைந்த பொருள்.

"சுருங்கக் கூற எல்லாம் கடந்த சூனியம்.
சூனியத்திலும் இருள்.
ஆக சிவம் இருள் நிறைந்த சூனியம்."

இது, யாம் உணர்ந்த கரு(த்து).

0 Comments: