Thursday, December 27, 2007

ஞானமென்பது என்ன?

ஞானமென்பது என்ன?
************************

பிவிப் பிணி நீங்கி முக்தியெனும் விடுதலையடைய நான்கு வழிகள்:

1.இறைனிடம், ஆண்டானும் அடிமை போலும் பழகி பக்தி செய்தல்(தாத மார்க்கம்).

2.அப்பனும் பிளையும் போலிருந்து பக்தி செய்தல்(சற்புத்ர மார்க்கம்)

3.நண்பன் நண்பனிடம் பக்தி செய்யுதல்(சக மார்க்கம்)

4."நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்)

இவற்றை முறையே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பார்.

1.முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது சரியை.

2.அதன்பின், அருள் வேறென்றும், தான் வேறென்றும் பகுத்து நோக்காது புறச்செயல் புரிவது கிரியை.

3.இறைவனை அடைய, நல்ல ஒரு குரு காட்டிய நல்வழியில் மனதையடக்கச் செய்யும் பயிர்ச்சி யோகம்.

4.மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம்.

இவற்றால் அடையும் முக்திகள்:

1.இறையுலகமாம் அறிவு உடலில்(சிதாகாயத்தில்) வாழுதல் சாலோகம்.

2.இறைவனின் அருகில் வாழுதல் சாமீபம்.

3.இறை உருப்பெற்று வாழுதல் சாரூபம்.

4.இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல் சாயுச்சியம்.

இவற்றுள், முத்தி முடிவென ஞானத்தையும், ஏனைய மூன்றையும் பத முத்தி எனவும் சான்றோர் கூறுவர்.

இதையே, திருமூலரும்:

"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்கவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே."

திருவடி (இரு கண்கள்) உணர்வாகிய ஞானத்தின் பிறவிப் பிணி நீக்கும் அறநெறி எந்த நாட்டிலுமில்லை. இம்மை, உம்மை, அம்மை ஆகிய மூவிடத்து நன்மையும் தரும் சமயங்களில் ஞானத்தை மிஞ்சியது ஏதுமில்லை. ஆகையால், அக்கோட்பாடு நன்மையும் ஆகாது. நல்ல வீடுபேற்றினைத் தர ஞானத்தால் மட்டுமே இயலும். ஞானத்திற் சிறந்தோர் மக்களில் சிறந்தவராம்.

3 Comments:

Anonymous said...

அய்யா,

இந்த பாடலில் திருமூலர் இறைவனை வெளிப்படையாக சுட்டவில்லை. மக்களுக்கு ஞானத்தின் சிறப்பைச் சொல்லுகிறார். வேறு பாடல்களில் இறைவனையும் ஞானத்தையும் இணைத்துச் சொல்லியுள்ளாரா?

Anonymous said...

திருமூலர் தன் 3000 பாடல்களிலும் இறைவனை சிவன்(சீவன்), சிவம், நந்தி (நம்+தீ), குரு எனப் பல பெயர்களில் சுட்டியுள்ளார். சுட்டுதல் என்றாலே வெளிப்படையாகவும் குறிப்பாகவும் உரைக்கவில்லை.

திருமந்திரந்தின் ஐந்தாம் தந்திரத்தில் (தன்+திறத்தில்) ஞானம் (எட்டாம் பாகம்) என்னும் தலைப்பில் மெய்யுணர்வைக் குறித்து பத்து பாக்களைத் தந்துள்ளார்.

ஞானம் இறையை அடைய ஒரு பாட்டை(வழி). அதுவே இராச(அரச) பாட்டை.

Anonymous said...

//."நீ", "நான்" என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்)//
இதைத் தான் வள்ளலார் சொன்னாரா?