அவைத்தைகள் ஐந்து
************************
(பஞ்சாவஸ்தைகள்)
1.சாக்கிரம் - நனவு
2.சொப்பனம் - கனவு
3.சுழுத்தி (ஸுஷுப்தி) - உறக்கம்
4.துரியம் - பேருறக்கம்(நிட்டை)
4.துரியாதீதம் - உயிர்ப்பு அடக்கம்
1."ஐயைந்து மத்திமை யானது சாக்கிரங்
கைகண்ட பன்னான்கிற் கண்டம் கனாவென்பர்
பொய்கண்டிலாத புருட னிதயஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி யாகுந் துரியமே"(திருமந்திரம்)
புருடன் = ஆன்மா.
அறிதற் கருவி ஐந்து - செவி,, மெய், கண், நாக்கு, மூக்கு
செய்தற் கருவி ஐந்து - நாக்கு, கால், கை,எருவாய், கருவாய்
இவையிரண்டும் சேர்ந்து இந்திரியம் 10.
வளி பத்து :
அறிவு வளி 5 -
உயிர்க் காற்று, மலக் காற்று, தொழிற் காற்று, ஒலிக்
காற்று, நிரவுக் காற்று
தொழில் வளி 5 -
தும்மற் காற்று, விழிக்காறு, கொ(கெ)ட்டாவிக் காற்று,
இமைக் காற்று, வீங்கற் காற்று
அகப்புறக் கலன்கள் = அந்தக் கரணம் - 4
எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு. இவற்றைச் சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பர்.
மத்திமை ஆகிய புருவ நடுவின்கண் இந்திரியங்கள் பத்தும், வளி பத்தும், அந்தக் கரணங்கள்(அகப் புறக் கலன்கள்) நான்கும், ஆள் ஒன்றும் சேர்ந்து இருபத்தி ஐந்து கருவிகளும் செயல்படும் நிலை நனவு (சாக்கிரம்) நிலையாகும்.
கண்டத்தில் வளி பத்து, அந்தக் கரணங்கள் நான்கு ஆக பதினான்கு கருவிகளும் செயல்படும் நிலை கனவு (சொப்பனம்) நிலையாகும்.
நெஞ்சத்தில் எண்ணமும் ஆளும் கருவிகளும் செயல்படும் நிலை உறக்க(சுழுத்தி) நிலயாகும்.
கொப்பூழின்கண் நிலைத்தவனாகிய ஆள் தொழில்படும் நிலை பேருறக்கநிலை(துரியம்).
இன்னும் எளிமையாகச் சொல்ல:
புருவமத்தியில் மேற்கூறிய 25 தத்துவங்களோடு சுக துக்கங்களை அறிந்து நிற்கும்போது சாக்கிரம் எனும் நினைவு நிலையாம்.
கண்டத்தில் பஞ்சேந்திரியங்களும், ஐந்து கர்மேந்திரியங்களும் தொழில்படும் நிலை சொப்பனமாகிய கனவு நிலை.
அந்தக் கரணங்கள் 4ம் சுழுத்தியோடு, ஆன்மாவைக் கூடி நின்று கண்டவை, கேட்டவை எதுவும் பிறருக்குச் சொல்லப் புலப்படாத நிலை சுழுத்தியாகிய உறக்க நிலையாம்.
சுழுத்தியை விட்டுக் கரணம் ஒன்றுடனே சீவாத்துமா நாபிக்கமலத்தில் நிற்கும் நிலை நிட்டையாகிய துரியம்.
இந்திரியங்கள் பத்தும், அந்தக் கரணங்கள் நான்கும் பற்றற்று சீவன் தானே மூலாதாரத்தில் சென்றோங்கி மலம், மதம், மாயை, ஸ்பரிசங்கள் எதையும் அறியாமல் நிற்கும் உயிர்ப்பு அடக்க நிலையே துரியாதீதமாகும்.
விளக்க விளக்க விரியும். திருமந்திரத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
Thursday, December 27, 2007
அவைத்தைகள் ஐந்து
Posted by ஞானவெட்டியான் at 4:57 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment